இந்த ஆண்டு 15 புதிய மாடல்கள்: சரவெடி கொளுத்த ஹோண்டா ஆயத்தம்
இந்த ஆண்டு 15 புதிய இருசக்கர வாகன மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டிருப்பதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இதில், 7 புதிய மாடல்களாகவும், 8 மேம்படுத்தப்பட்ட மாடல்களாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்டிவா, டியோ ஸ்கூட்டர்கள், சிபி ஷைன், ட்ரீம் யுகா மற்றும் ட்ரீம் நியோ பைக்குகள் இந்த ஆண்டு மேம்படுத்தப்பட்டு வர இருக்கின்றன.
இதுகுறித்து ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனத்தின் உயரதிகாரி யவிந்தர் எஸ் குலேரியா குறிப்பிடுகையில்," இந்த ஆண்டு ஸ்கூட்டர் மற்றும் பைக் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் மாடல்களை கொடுக்க இருக்கிறோம்," என்று கூறினார்.
கடந்த மாதம் புதிய சிபி யூனிகார்ன் 160 பைக்கை அறிமுகம் செய்த ஹோண்டா நிறுவனம் அடுத்த இரு மாதங்களில் 6 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால், இருசக்கர வாகனங்களை வாங்க காத்திருப்போர் ஹோண்டா நிறுவனத்தின் மீது கண் வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications









