யூஸ்டு பைக் வர்த்தகத்தில் இறங்கிய ஹோண்டா 2 வீலர்ஸ் நிறுவனம்!
அனைத்து பிராண்டுகளின் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் வர்த்தகத்திற்காக ஸ்ரீராம் ஆட்டோமால் நிறுவனத்துடன் ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
நாட்டின் இருசக்கர வாகனங்கள் மொத்த விற்பனையில் 15 சதவீதம் அளவுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களின் விற்பனை இருக்கிறது. ஆனால், பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஒழுங்குப்படுத்தப்பட்ட வர்த்தகமாக இதுவரை இல்லாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான வர்த்தகத்தை அளிக்கும் விதத்தில், ஸ்ரீராம் ஆட்டோமால் ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 3.5 லட்சம் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய இந்த புதிய கூட்டணி இலக்கு வைத்துள்ளது. முதல்கட்டமாக 40 நகரங்களில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகன விற்பனை நிலையங்களை திறக்க இந்த கூட்டணி முடிவு செய்துள்ளது.
அடுத்து வரும் ஆண்டுகளில் நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் விற்பனை நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை மாற்றி புதிய இருசக்கர வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மன நிறைவான சேவையை வழங்கும் விதத்தில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, பெஸ்ட் டீல் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்ட பைக்குகளை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








