கோவாவில் 3வது இந்திய பைக் திருவிழா... பைக் பிரியர்கள் குவிந்தனர்!
இன்றும், நாளையும் நடைபெற இருக்கும் இந்திய பைக் வீக் திருவிழாவில் பங்கேற்பதற்கும், காண்பதற்கும் ஆயிரக்கணக்கான பைக் பிரியர்கள் கோவாவில் குவிந்து வருகின்றனர்.
நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பைக் பிரியர்கள் தங்களது சொந்த பைக்குகளில் கோவாவிற்கு படையெடுத்து வருகின்றனர். பெனெல்லி, ட்ரையம்ப், அப்ரிலியா, ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட பல முன்னணி பைக் நிறுவனங்கள் இந்த விழாவில் தங்களது தயாரிப்புகளை காட்சிபடுத்தி வருகின்றன.

மேலும், கஸ்டமைஸ் மாடல்களும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இதுதவிர, இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் 3வது பைக் திருவிழா களைகட்டியிருக்கிறது.
எமது சிறப்பு நிருபர் குழுவினர் மூலம் இந்திய பைக் வீக் திருவிழாவின் நிகழ்வுகளை வாசகர்களுக்கு வழங்க இருக்கிறோம்.


Click it and Unblock the Notifications








