ஹோண்டாவின் மிகப்பெரிய சந்தையாக மாறுகிறது இந்தியா ?
இந்தியா ஹோண்டாவின் மிகப்பெரிய சந்தையாக மாற உள்ளதாக தெரிகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட இரு சக்கர வாகனங்களின் விற்பனை இந்தியாவில் கூடிக்கொண்டே இருக்கிறது. இதே நேரத்தில், ஹோண்டா இரு சக்கரங்களின் தயாரிப்புகளுக்கு பெரிய சந்தையாக விளங்கிய இந்தோனேஷியாவில், அதன் விற்பனை குறைந்து கொண்டே இருக்கிறது.
வரும் 2020-ஆம் ஆண்டிற்குள் 20 மில்லியன் இரு சக்கர வாகனங்களை விற்க வேண்டும் என்ற இலக்கை, ஹோண்டா நிறுவனம் நிர்ணயம் செய்து கொண்டுள்ளது.
அந்த இலக்கை அடைய இந்தியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மார், உள்ளிட்ட நாடுகளை முக்கியமான சந்தையாக கருதுதிறது. 2020-ஆம் ஆண்டிற்குள், இந்தியாவில் மட்டும் 7 முதல் 8 மில்லியன் இரு சக்கர வாகனங்களை விற்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் கூடி வரும் ஹோண்டா நிறுவனங்களின் தயாரிப்புகளின் விற்பனை குறித்து, ஹோண்டாவின் தலைமை அதிகாரி ஷிஞ்ஜி ஆயோமா பெருமிதம் வெளிபடுத்தினார். இந்த நிதி ஆண்டிலோ அல்லது அடுத்த நிதி ஆண்டிலோ, ஹோண்டா நிறுவன தயாரிப்புகளுக்கு முக்கியமான சந்தையாக விளங்கும் இந்தோனேஷியாவின் இடத்தை இந்தியா பிடித்துவிடும் என ஷிஞ்ஜி கூறினார்.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ஹோண்டா மோட்டர்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனை 3 மடங்கிற்கு மேல் கூடியுள்ளது.
இந்தியாவில், இந்த நிதி ஆண்டில் மட்டும் 4.7 மில்லியன் இரு சக்கரங்களை விற்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டில், குறைந்தது 6.4 மில்லியன் இரு சக்கர வாகனங்களை விற்க இலக்கு கொண்டுள்ளது.
2007 முதல் 2011 வரை, ஷிஞ்ஜி ஆயோமா தான் ஹோண்டா இந்தியாவின் தலைமை பொறுப்பை நிர்வகித்து வந்தார். இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தையில் தாங்களே முதல் இடத்தில் இருக்க நோக்கம் கொண்டுள்ளதாக ஷிஞ்ஜி ஆயோமா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








