ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு பிரத்யேக ஓட்டுனர் உரிமம் : மத்திய அரசு திட்டம்
வெளிநாடுகளில் உள்ளது போன்று, உயர் திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு, தனிப்பட்ட பிரத்யேகமான டிரைவிங் லைசன்ஸ் முறையை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் 500 சிசி மற்றும் அதற்கு கூடுதலான திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு அமல்படுத்தபடலாம் என தெரிகின்றது. இந்த நடைமுறை ஏற்கனவே உலகின் சில நாடுகளில் நடைமுறையில் உள்ளது.
குறிப்பிட்ட அளவுக்கு கூடுதலான இஞ்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (இயந்திர இடப்பெயர்வு) கொண்ட வாகனங்களை, பிரத்யேகமான லைசன்ஸ் இல்லாமல் இயக்குவதற்கு பல நாடுகளில் அனுமதி கிடையாது.
இத்திட்டம் இந்தியாவிற்கு, நடைமுறைக்கு வந்தால் மிகவும் நல்ல விஷயமாக இருக்கும், அதற்கு காரணம், அதிக அளவிலான விபத்துகளுக்கு காரணமாக கூறபடுவது, இரு சக்கர வாகனங்களும், உயர்திறன் மிக்க மோட்டார்சைக்கிள்களும் தான்.
தற்போதைய நிலையில், இரண்டு விதமான லைசன்ஸ் நடைமுறைகள் உள்ளது. முதலாவது லைசன்ஸ், கியர்கள் அல்லாத இருசக்கர வாகனங்களுக்கானதாகும். இது, மொபட் மற்றும் ஆக்டிவா அல்லது கைனெடிக், வீகோ உள்ளிட்ட ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கு பொருந்தும்.
இரண்டாவது விதமான லைசன்ஸ், கியர்கள் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கானதாகும். ஒருவர் இந்த லைசன்ஸை வாங்கிவிட்டால், இஞ்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (இயந்திர இடப்பெயர்வு) மற்றும் பவர் வேறுபாடுகளின் பேதங்களின்றி எந்த விதமான கியர்ட் மோட்டார்சைக்கிள்களையும் இயக்க அனுமதி கிடைத்துவிடுகிறது.
இது பெரும்பாலான நேரங்களில், பலருக்கு ஆபத்தாக முடிந்து விடுகிறது. உதாரணமாக, அனுபவம் இல்லாவிட்டாலும், அதிக அளவில் பணம் படைத்த சில வாலிபர்கள் அதிக திறன்மிக்க பைக்குகளை வாங்கி விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர்.

பைக்குகளை இயக்க கற்று கொள்ளுதல் மிக ஒரு நீண்ட கால நடவடிக்கையாகும். ஒவ்வொரு வாகனத்தின் பவர் எப்படி கையாள்வது மற்றும் எப்படி கட்டுபடுத்துவது என்பதை மெல்ல மெல்ல தெரிந்து கொண்டு அடுத்த கட்டதிலான உயர்திறன் வாய்ந்த மோட்டார்சைக்கிள்களை இயக்க கற்று கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கையில், ஒரே விதமான லைசன்ஸ் கொண்டு பல்வேறு வகை திறன்கள் கொண்ட மோட்டார்சைக்கிள்களை இயக்கும் வாகன ஓட்டிகளை இத்தகைய புதிய விதிமுறைகளை கொண்டு கட்டுபடுத்துவது இந்திய சாலைகளை இன்னும் பாதுகாப்பானதாக மாற்றும்.
மேலும், இந்திய சாலைகளை மறுவடிவமைத்து, மக்களுக்கு போதிய அளவில் அறிவுறைகளை வழங்கி, கடுமையான சாலை பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைபடுத்தினால், நமது நாட்டில் விபத்துகளை அதிக அளவில் குறைக்க முடியும்.


Click it and Unblock the Notifications








