பெங்களூரில் புதிய ஷோரூமை திறக்கும் இந்தியன் மோட்டார்சைக்கிள்!

Written By:

இந்தியாவில் 2வது மோட்டார்சைக்கிள் ஷோரூமை பெங்களூரில் திறக்கிறது இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம்.

அமெரிக்காவை சேர்ந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் உயர்வகை க்ரூஸர் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் பிரபலமாக திகழ்கிறது.

Indian Motorcycle
  

இந்திய மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்த அந்த நிறுவனம் இந்தியன் ஸ்கவுட், இந்தியன் கிளாசிக், இந்தியன் சீஃப் விண்டேஜ் மற்றும் இந்தியன் சீஃப்டெயின் ஆகிய மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

தற்போது டெல்லியில் மட்டுமே இந்தியன் மோட்டார்சைக்கிள் டீலர்ஷிப் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், வர்த்தக விரிவாக்கத்தின் ஒருபகுதியாக இந்தியாவில் 2வது ஷோரூமை திறக்க முடிவு செய்திருக்கிறது.

தென் இந்திய மார்க்கெட்டை குறிவைத்து புதிய டீலர்ஷிப்பை பெங்களூரில் திறக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் மத்தியிலிருந்து இந்த புதிய ஷோரூம் செயல்பட துவங்கும்.

பெங்களூரையடுத்து, மூன்றாவது ஷோரூமை மும்பையில் திறக்க முடிவு செய்திருக்கிறது இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ்.

English summary
Indian Motorcycle now is contemplating on expanding its dealership network. Currently they have a single dealership for entire India, which creates a lot of hassle for buyers. The American manufacturer now plans inaugurating its second dealership in Bangalore, India.
Story first published: Monday, January 19, 2015, 10:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark