இந்தியாவில் இந்தியன் மோட்டார்சைக்கிள் விற்பனை அமோகம்
இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கியது முதல் இதுவரை 200 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளதாக இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனம் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கி 15 மாதங்களில் இந்த புதிய மைல்கல்லை தாண்டியுள்ளது. உயர்வகை க்ரூஸர் வகை மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வரும் இந்தியன் நிறுவனம் தற்போது மோட்டார்சைக்கிள்களை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

இதனால், விலை அதிகம் இருந்தாலும் இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் மாடல்களுக்கு நம் நாட்டவர் சிறப்பான வரவேற்பை தந்துள்ளனர். இதையடுத்து, சென்னை, மும்பை, ஆமதாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புதிய ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்தியாவிலேயே தனது மோட்டார்சைக்கிள்களை அசெம்பிள் செய்து விற்கவும் முடிவு செய்துள்ளது. இதன்காரணமாக விலை கணிசமாக குறையும் என்பதால், இன்னும் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பெற முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.


Click it and Unblock the Notifications








