இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி பைக் அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியா வருகிறது!

By Ravichandran

இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், தங்களின் புதிய 2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளை 2016-ஆம் ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.

இந்திய வாகன சந்தைகளின் தொடர் வளர்ச்சியின் காரணமாக, ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவை நோக்கி வருகின்றனர். விரைவில் அறிமுகமாக உள்ள ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள் தொடர்பான தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

2016 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்;

2016 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்;

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி, இத்தாலியின் மிலன் என்ற இடத்தில் நடைபெற்ற 2015 இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் முதன் முதலாக சர்வதேச அளவில் காட்சிபடுத்தபட்டது.

ஏராளமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்க உள்ளனர். அந்த வகையில், இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனமும், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்க திட்டமிட்டு உள்ளது.

இந்த ஸ்கவுட் சிக்ஸ்டி, இந்திய அளவில், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

விற்கபடும் விதம்;

விற்கபடும் விதம்;

இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் அனைத்து குருஸர் மோட்டார்சைக்கிள்களும், சிபியூ எனப்படும் கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் (முழுவதுமாக உற்பத்தி செய்து முடிக்கபட்ட) வகையிலான வாகனங்களாக வழங்கபட உள்ளது.

இந்த 2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டியும், சிபியூ வடிவிலேயே இந்தியாவில் கிடைக்க உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி, 999 சிசி, வி-ட்வின், லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின் 78 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 88.8 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் இஞ்ஜினியர்கள், இதன் புதிய இஞ்ஜினை 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைப்பார்கள் என தெரிகிறது. இதற்கான பவர், பெல்ட் டிரைவ் சிஸ்டம் மூலம் வழங்கபடும் என தெரிகிறது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

இந்த ஸ்கவுட் சிக்ஸ்டி குரூஸர், 3 வண்ணங்களில் கிடைக்க உள்ளது.

இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ், இந்த வாகனத்தை தண்டர் பிளாக், இண்டியன் ரெட் மற்றும் பியர்ல் வைட் பெயிண்ட் உள்ளிட்ட 3 நிறங்களில் வழங்க உள்ளனர்.

குரோம் உபயோகம் மிக குறைந்த அளவிலேயே இருக்கும் என தெரிகிறது. ஏனெனில், பெரும்பாலான பாகங்களுக்கு பிளாக் பவுடர் கோட்டிங் வழங்கபட்டிருக்கும்.

இந்தியாவில் அறிமுகம்?

இந்தியாவில் அறிமுகம்?

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி, இந்தியாவில் 2016-ஆம் ஆண்டு மத்தியில் தான் அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதன் இந்திய அறிமுகம், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்ட பின்னரே நிகழ்த்தபடும் என தெரிகிறது.

இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் தற்போது தங்களின் அனைத்து மோட்டார்சைக்கிள்களையும் எக்ஸ்குளுசிவ் டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.

விலை;

விலை;

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி தான், இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சார்பாக வழங்கபடும் மிக விலை குறைந்த குரூஸர் ஆகும்.

அமெரிக்காவில், 2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள் 8,999 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 6.04 லட்சம் ரூபாய்) என்ற விலையில் விற்கபடுகிறது.

போட்டி மோட்டார்சைக்கிள்கள்;

போட்டி மோட்டார்சைக்கிள்கள்;

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள், இந்திய வாகன சந்தையில் மிகவும் போட்டிகரமான விலைகளுடன் விற்கபட்டால், ஹார்லி-டேவிட்ஸன் மற்றும் டிரயம்ஃப் மோட்டார்சைக்கிள்களுக்கு கடும் போட்டியை உருவாக்க கூடும்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 19, 2015, 10:37 [IST]
English summary
Indian Scout Sixty Motorcycles is expected to be launched In India By Mid-2016. Indian Motorcycles would participate in 2016 Delhi Auto Expo and is expected to make the Indian debut of Indian Scout Sixty at 2016 Delhi Auto Expo. Indian Scout Sixty Motorcycles and all other cruiser Motorcycles are imported as Completely Built Units (CBU).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+