கவாஸாகியின் முதல் 125சிசி ஸ்கூட்டர் அறிமுகம் - படங்களுடன் தகவல்கள்!

Written By:

இத்தாலியிலுள்ள மிலன் நகரில் நடந்து வரும் இஐசிஎம்ஏ இருசக்கர வாகன கண்காட்சியில் கவாஸாகி நிறுவனத்தின் முதல் 125சிசி ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

கவாஸாகி ஜே125 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் கவாஸாகி ஜே300 என்ற 300சிசி ஸ்கூட்டரைவிட குறைவா விலையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சிட்டி ஸ்கூட்டர்

சிட்டி ஸ்கூட்டர்

நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட விலை குறைவான புதிய பிரிமியம் மாடலாக இதனை கவாஸாகி தெரிவித்துள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய ஸ்கூட்டர் மாடலில் 125சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 13.8 பிஎச்பி பவரையும், 12 என்எம் டார்க்கையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் கொண்டது.

மீட்டர் கன்சோல்

மீட்டர் கன்சோல்

இரட்டை குடுவைகளில் அனலாக் ஸ்பீடோமீட்டரும், ஆர்பிஎம் மீட்டரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் நடுவில் எல்சிடி டிஸ்ப்ளே ஒன்று உள்ளது. அதில், பல்வேறு தகவல்களை பெற முடியும்.

டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக்

இரண்டு சக்கரங்களிலும் பெட்டல் டிஸ்க் கொண்ட பிரேக் சிஸ்டம் உள்ளதுடன், இரண்டு சக்கரங்களுக்கும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

மெட்டாலிக் ஆந்த்ராசிட் பிளாக், மெட்டாலிக் ப்ராஸ்டேட் ஐஸ் ஒயிட் மற்றும் மெட்டாலிக் ப்ளாட் ஆந்த்ராசிட் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

சேஸீ சிறப்பு

சேஸீ சிறப்பு

ஐரோப்பிய சாலைகளுக்கு ஏற்ற விதத்தில், இதன் சேஸீ உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விலை உள்ளிட்ட விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்தியாவுக்கு...

இந்தியாவுக்கு...

தற்போது பைக் மார்க்கெட்டைவிட ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மார்க்கெட் அபரிமிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது. எனவே, ஸ்கூட்டர் மார்க்கெட் அடுத்த நிலைக்கு செல்லும்போது, இதுபோன்ற மாடல்களுக்கு நிச்சயம் அதிக வரவேற்பு இருக்கும். மேலும், இந்திய வாடிக்கையாளர்கள் பிரிமியம் மாடல்களை நோக்கி அதிக கவனம் செலுத்தத் துவங்கியிருப்பதும், இதுபோன்ற மாடல்கள் வரும் ஆண்டுகளில் எளிதாக இந்தியாவிற்குள் தடம் பதிக்கும் என்று நம்பலாம்.

 

English summary
Kawasaki J125 Scooter Unveiled In EICMA.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark