கவாஸாகி வெர்சிஸ் 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது - விபரம்

By Saravana

அட்வென்ச்சர் டூரர் ரகத்தில் புதிய பைக் மாடலை கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. கவாஸாகி வெர்சிஸ் 650 என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய பைக் மாடல், தற்போது விற்பனையில் இருக்கும் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கைவிட குறைவான சிசி எஞ்சின் கொண்ட மாடலாகவும், விலை குறைவாகவும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த புதிய பிரிமியம் பைக் மாடல் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புரோபைக்கிங் ஷோரூம்கள் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 12- வது மாடல்

12- வது மாடல்

இந்தியாவில் கவாஸாகி நிறுவனத்தின் 12வது பிரிமியம் பைக் மாடலாக கவாஸாகி வெர்சிஸ் 650 பைக் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் அசெம்பிள்

இந்தியாவில் அசெம்பிள்

தாய்லாந்தில் உள்ள ஆலையிலிருந்து முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, பஜாஜ் ஆட்டோவின் அகுர்தி ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 649சிசி பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட லிக்யூடு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 64 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கில் 17 இன்ச் அலாய் வீல்கள், முன்புறத்தில் இரட்டை பிஸ்டன்களுன் கூடிய 300மிமீ டிஸ்க் பிரேக் செட்டிங்கும், பின்புறத்தில் ஒற்றை பிஸ்டன் கொண்ட 250மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இதற்கு உறுதுணையாக செயலாற்றும். முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளது.

விலை

விலை

ரூ.6.60 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

மற்றொரு புதிய மாடல்

மற்றொரு புதிய மாடல்

கவாஸாகி வெர்சிஸ் 650 பைக் மாடலுடன் சேர்த்து, கவாஸாகி கேஎல்எக்ஸ்110 என்ற புதிய பைக் மாடலையும் கவாஸாகி அறிமுகம் செய்துள்ளது. இது ஆஃப்ரோடு பைக் மாடல். சாதாரண சாலைகளில் இயக்க முடியாது.

விலை விபரம்

விலை விபரம்

கவாஸாகி கேஎல்எக்ஸ்110 பைக் ரூ.2.65 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பைக் ஜப்பானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 25, 2015, 11:43 [IST]
English summary
Kawaski has launched of its Versys 650 adventure-tourer motorcycle in India. The new Versys 650 has been priced at Rs. 6,60,000 ex-showroom (Delhi) and will be retailed through Bajaj's Probiking showroom
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+