கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கவாஸாகி நின்ஜா 1000!

Written By:

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கவாஸாகி பைக்குகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.

இந்த வரிசையில், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கவாஸாகி நின்ஜா 1000 பைக் விரைவில் இந்தியா வர இருக்கிறது. இந்த பைக் பற்றியத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கூடுதல் பாதுகாப்பு

கூடுதல் பாதுகாப்பு

வளைவுகளில் அல்லது அவசர சமயங்களில் எஞ்சின் பிரேக்கிங் செய்யும்போது, எஞ்சின் மற்றும் க்ளட்ச் சிஸ்டத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில், பாதுகாக்கும் ஸ்லிப்பர் க்ளட்ச் சிஸ்டம் கொடுக்கப்பட உள்ளது. குறிப்பாக, டிராக்குகளில் ஓட்டும்போது இது மிக பயனுள்ள தொழில்நுட்பமாக இருக்கும்.

பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

மேம்படுத்தப்பட்ட மாடலாக வரும் கவாஸாகி நின்ஜா 1000 பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கும். இந்த புதிய பாதுகாப்பு அம்சமும் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் விஷயமாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய கவாஸாகி நின்ஜா 1000 பைக்கில் 1,043சிசி 4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது. லிக்யூடு கூல்டு சிஸ்டத்தில் இயங்கும் இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 எச்பி பவரையும், 111 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

விலை அதிகரிக்குமா?

விலை அதிகரிக்குமா?

கூடுதலாக ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்லிப்பர் க்ளட்ச் சேர்க்கப்பட்டிருந்தாலும், விலை அதிகரிக்கப்படாது என்பது இந்தியர்களுக்கு ஆறுதலான விஷயமாக தெரிவிக்கப்படுகிறது.

 
English summary
2016 Ninja 1000 model will now sport ABS and slipper clutch as standard equipment. This will surely make the motorcycle more desirable to several enthusiasts looking for safety and modern tech.
Story first published: Monday, September 7, 2015, 10:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark