கவாஸாகியின் 125சிசி மினி ஸ்போர்ட்ஸ் பைக்கின் படங்கள், விபரங்கள்!

By Saravana

டோக்கியோ ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வர இருக்கும் கவாஸாகின் புதிய 125சிசி மினி ஸ்போர்ட்ஸ் பைக்கின் விபரங்கள், படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

ஹோண்டா எம்எஸ்எக்ஸ் 125 மற்றும் க்ரோம் மினி ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களுக்கு போட்டியாக, இந்த புதிய கவாஸாகி மினி ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இரு மாடல்கள்

இரு மாடல்கள்

கவாஸாகியின் இசட் குடும்ப வரிசையில் மிக குறைவான சிசி எஞ்சினுடன் வரும் முதல் மினி பைக் மாடல். இசட்125 மற்றும் இசட்125 புரோ ஆகிய இரு மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய மினி ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 125சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 9.4 பிஎச்பி பவரை அளிக்க கூடியதாக இருக்கிறது. இதில், இசட்125 பைக் மாடலில் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், இசட்125 புரோ மாடலில் 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

இந்த மாடல்களில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புற்தில் மோனோ ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் அமைப்பும் உள்ளது. இருசக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் சிஸ்டம் உள்ளது.

விலை

விலை

இந்திய மதிப்பில் 1.4 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்தியா வருமா?

இந்தியா வருமா?

கவாஸாகியின் தாயகமான ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதில் சந்தேகம் நிலவுகிறது. இதுகுறித்து கவாஸாகி இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 27, 2015, 16:34 [IST]
English summary
Kawasaki has revealed the Z125 motorcycles, ahead of the Tokyo Motor Show, which is to start from 28 Oct. The smallest motorcycle of the ‘Z' family will be available in two variants-Z125 and Z125 Pro.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+