அக்.25ல் அறிமுகமாகும் கவாஸாகியின் குட்டி ஸ்போர்ட்ஸ் பைக்!!
சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் துறையினரின் தற்போதைய ஹாட் டாப்பிக் கவாஸாகி நிறுவனத்தின் குட்டி ஸ்போர்ட்ஸ் பைக் பற்றியதாகத்தான் உள்ளது. அந்த பைக்கின் ஸ்பை ஷாட் படம் ஒன்று ஆன்லைனில் வெளியாகனதால்தான் இந்த பரபரப்புக்கு காரணமாகியுள்ளது.
இந்த பைக் பற்றி வெளியாகியிருக்கும் தகவல்கள் ஆட்டோமொபைல் பிரியர்கள் மட்டுமின்றி, அனைவரின் கவனத்தை தூண்டுவதாக உள்ளது. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.

கவாஸாகியின் நேக்டு ரக பைக்குகள் அறிமுகம் செய்யப்படும் இசட் குடும்ப வரிசையில், வர இருக்கிறது. கரடுமுரடான சாலைகள் மற்றும் சாதாரண சாலைகள் என அனைத்து பயன்பாட்டிற்கும் ஏற்றதொரு ப்ரீஸ்டைலிங் வகையிலான பைக் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கவாஸாகியின் பிரபல சூப்பர் பைக் மாடல்களின் டிசைன் தாத்பரியங்கள் கையாளப்பட்டிருக்கின்றன. ஹெட்லைட் பல்புகள் கவாஸாகியின் இசட்800 பைக் போலவும், பெட்ரோல் டேங்க் தோற்றம் இசட்1000 பைக்கை போலவும் இருக்கிறது. பெட்ரோல் டேங்கின் கீழ்புற வடிவமைப்பு கவாஸாகி இஆர்6என் பைக்கை போன்று இருக்கிறது.

இந்த புதிய கவாஸாகி இசட்125 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரகசியமாக படம்பிடிக்கப்பட்ட கவாஸாகி இசட்125 பைக் பழுப்பும், சாம்பல் நிறமும் கலந்த ஓர் புதிய வண்ணக் கலவையில் அசத்தலாக காட்சியளிக்கிறது.

முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. இருசக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.

அக்டோபர் 25ந் தேதி உலக அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன் பிறகு, டோக்கியோ மோட்டார் ஷோவில் முறைப்படி, பொது பார்வைக்கு கொண்டு வரப்படுகிறது.
Via - Motorival


Click it and Unblock the Notifications








