ஆட்டோமொபைல் துறையின் இன்றைய பரபரப்பு கேடிஎம் டியூக் 800...!!

By Saravana

முதல்முறையாக கேடிஎம் டியூக் 800 பைக்கின் ஸ்பை படங்கள் மற்றும் தகவல்கள் இன்டர்நெட்டில் கசிந்துள்ளது. இதுதான் இன்றைய பரபரப்பு செய்தியாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த பைக்கில் இரட்டை சிலிண்டர் கொண்ட புதிய எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பதும், பைக் பிரியர்களின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

விரைவில் தரிசனம்

விரைவில் தரிசனம்

வரும் நவம்பர் மாதம் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற இருக்கும் இருசக்கர வாகன கண்காட்சியில்தான் இந்த புதிய பைக் மாடலை கேடிஎம் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதனைத்தொடர்ந்து, பல்வேறு மார்க்கெட்டுகளிலும் விற்பனைக்கு செல்லும்.

புதிய எஞ்சின்

புதிய எஞ்சின்

இந்த புதிய பைக்கில் இரட்டை சிலிண்டர் கொண்ட புதிய எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. மேலும், இந்த பைக்கின் எஞ்சின் அதிகபட்சமாக 118 எச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கும்.

 கூடுதல் சிறப்புகள்

கூடுதல் சிறப்புகள்

கேடிஎம் டியூக் 690 பைக்கின் உதிரிபாகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதேசமயத்தில், முன்புறத்தில் டியூவல் டிஸ்க் பிரேக் போன்ற கூடுதல் பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கும்.

இந்தியாவிற்கும் வாய்ப்பு

இந்தியாவிற்கும் வாய்ப்பு

நவம்பர் மாதம் மிலன் ஆட்டோ ஷோவை தொடர்ந்து, சர்வதேச அளவில் இந்த புதிய மாடலை விற்பனைக்கு கொண்டு செல்ல கேடிஎம் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. மேலும், இந்தியாவிலும் இந்த புதிய பைக் மாடல் நிச்சயம் வரும் என்பதுடன் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது.

பஜாஜிற்கு பலன்

பஜாஜிற்கு பலன்

இந்தியாவில் இந்த புதிய பைக் மாடல் வரும்போது, நிச்சயம் இதற்கு இணையான புதிய பைக் மாடலை பஜாஜ் ஆட்டோ தயாரித்து அறிமுகம் செய்யும் வாய்ப்பு ஏற்படும். இதனால், உயர்வகை ஸ்போர்ட்ஸ் பைக் தயாரிப்பாளராகவும் தன்னை பஜாஜ் ஆட்டோ முன்னிறுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனத்தில் இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ முக்கிய முதலீட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, August 24, 2015, 13:29 [IST]
English summary
Austrian manufacturer has commenced testing its Duke 800 motorcycle, which is expected to be made in India. This will make sure that cost will be kept low and profits can be maximised.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+