பெனெல்லி டிஎன்டி 25 பைக் விரைவில் விற்பனைக்கு வருகிறது!

Written By:

இத்தாலியை சேர்ந்த பெனெல்லி பிராண்டு பைக்குகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து, தனது விற்பனையை வலுப்படுத்திக் கொள்ளும் விதத்தில் புதிய பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது பெனெல்லி.

பெனெல்லி டிஎன்டி 25 என்ற அந்த புதிய பைக் மாடல் வரும் டிசம்பரில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பெனெல்லி நிறுவனத்தின் மிக குறைவான விலை பைக் மாடலாக வருவதால், இளைஞர்கள் மத்தியில் ஆவலைத் தூண்டியிருக்கிறது.

 டிசைன்

டிசைன்

தற்போது இந்திய மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கும் பெனெல்லி டிஎன்டி 300 பைக்கின் அடிப்படையிலான 250சிசி பைக் மாடல். இது நேக்கட் பாடி ஸ்டைல் கொண்ட மாடலாக இருப்பதால், குறைந்த அளவிலான பேனல்கள் கொடுக்கப்பட்டு திறந்த மேனியாக வசீகரிக்க வருகிறது.

எஞ்சின்

எஞ்சின்

பெனெல்லி டிஎன்டி 25 பைக்கில் சிங்கிள் சிலிண்டருடன் லிக்யூடு கூல்டு சிஸ்டம் கொண்ட 250சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 25 பிஎச்பி பவரையும், 22 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

எடை

எடை

பெனெல்லி டிஎன்டி 25 பைக் 150 கிலோ எடை கொண்டது. எனவே, ஓட்டுவதற்கும், கையாள்வதற்கும் மிக எளிதான ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக இருக்கும்.

சஸ்பென்ஷன் & பிரேக் சிஸ்டம்

சஸ்பென்ஷன் & பிரேக் சிஸ்டம்

முன்புறத்தில் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது. முன்புறத்தில் தலைகீழ் அமைப்புடைய ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.1.75 லட்சம் முதல் ரூ.2 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேடிஎம் டியூக் 200 மற்றும் பஜாஜ் பல்சர் 200 என்எஸ் பைக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

  
English summary
Benelli could launch of the TNT 25 motorcycle in India during December. When launched, the TNT 25 will be the company's first and only single cylinder motorcycle on offer, and will be placed below the TNT 300, as an entry level motorcycle.
Story first published: Saturday, November 21, 2015, 10:08 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark