டியூரோ ஸ்கூட்டருக்கு விடை கொடுத்த மஹிந்திரா!
மஹிந்திரா இருசக்கர வாகன நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து டியூரோ ஸ்கூட்டர் நீக்கப்பட்டுள்ளது.
வாகன தயாரிப்பில் இந்தியாவின் பெரிய நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா இருசக்கர வாகன வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகிறது.

தற்போது ஊசோ 125 மற்றும் கஸ்ட்டோ ஆகிய ஸ்கூட்டர் மாடல்களையும், மஹிந்திரா செஞ்சூரோ பைக்கையும் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், இதுவரை விற்பனையில் இருந்து வந்த டியூரோ ஸ்கூட்டரை அந்த நிறுவனம் இணையதளத்திலிருந்து நீக்கியிருக்கிறது. விற்பனையும் சொல்லிக் கொள்ளும் அளவு இல்லை.
இதையடுத்து, அந்த ஸ்கூட்டரின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும், புதிய மாடல்களை களமிறக்க வசதியாக டியூரோ ஸ்கூட்டருக்கு விடைகொடுத்ததுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








