அப்பாடா.... ஒருவழியாக மஹிந்திரா மோஜோவுக்கு முன்பதிவு ஆரம்பம்!
கடந்த 4 ஆண்டுகளாக போக்கு காட்டி வந்த மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக் ஒருவழியாக மார்க்கெட்டிற்கு வர இருக்கிறது.
ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் 300சிசி எஞ்சினுடன் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக் களமிறங்க உள்ளது. மிக நீண்டகாலமாக சாலை சோதனைகள் மற்றும் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மஹிந்திரா செஞ்சூரோ பைக்கின் வெற்றியை தொடர வைக்கும் விதத்தில், இந்த புதிய பைக்கிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மிக நீண்ட தாமத்திற்கு பின்னர், இந்த பைக்கிற்கான முன்பதிவு மஹிந்திரா டீலர்களில் துவங்கப்பட்டிருக்கிறது. ரூ.10,000 முன்பணத்தை பெற்றுக் கொண்டு முன்பதிவு செய்யப்படுகிறது.
வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இந்த பைக்கிற்கான முன்பதிவு துவங்கும் என்று எதிரபார்க்கப்படுகிறது. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர் ஆகிய நகரங்களில் முதல் கட்ட விற்பனை துவங்கப்படும்.


Click it and Unblock the Notifications








