மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக் லோகோ வெளியீடு!

Written By:

விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக்கின் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் முதல் ஸ்போர்ட்ஸ் பைக்காக வரும் மோஜோ சவாலான விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mahindra Mojo
 

அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் வந்து வாடிக்கையாளர்களை வசம் கொண்ட செஞ்சூரோ போன்று, மோஜோவும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மோஜோ பைக்கின் லோகோவை மஹிந்திரா வெளியிட்டிருப்பதுடன், அதற்கான வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறது.

கேடிஎம் டியூக் 390 பைக் போன்று செயல்திறன் மிக்க மாடலாக இல்லாமல், நீண்ட தூரம் பயணிப்பதற்கு ஏற்ற டூரர் வகை அம்சங்களை நிரம்ப பெற்றிருக்கும் என்று கருதப்படுகிறது.

300சிசி பைக் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட இருக்கும் மோஜோ வெளிநாட்டு ஜம்பவான் மாடல்களுடன் மோத இருக்கிறது. 

English summary
Mahindra Mojo Logo has been revealed officially by the company. The company is looking to make a unique identity for its much awaited motorcycle, the Mojo. It will also be the company's flagship two-wheeler.
Story first published: Friday, October 2, 2015, 11:01 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark