மஹிந்திரா மோஜோ பைக்கின் விலை உயர்த்தப்பட்டது

By Saravana

தீபாவளி பண்டிகையை கொண்டாடிய கையோடு, மோஜோ பைக்கின் விலையை உயர்த்தியிருக்கிறது மஹிந்திரா நிறுவனம்.

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் டூரர் பைக் மார்க்கெட்டில் புதிய வரவான மஹிந்திரா மோஜோ பைக் ரூ.1.58 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

Mahindra Mojo

மிக குறைவான விலை ஸ்போர்ட்ஸ் ரக மாடல் என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியிலும் ஆர்வம் காணப்படுகிறது. டெல்லி, மும்பை, புனே மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் மட்டும் தற்போது விற்பனைக்கு செய்யப்படுகிறது.

இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்டபோதே, தீபாவளிக்கு பின்னர் விலை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மஹிந்திரா மோஜோ பைக்கின் விலை ரூ.5,000 அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, ரூ.1.63 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இனி மஹிந்திரா மோஜோ பைக் கிடைக்கும். இதுவரை ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இல்லாதது ஒரு குறையாக இருக்கிறது.

விரைவில் அந்த குறையையும் போக்கும் விதத்தில், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடலையும் அறிமுகம் செய்ய மஹிந்திரா முடிவு செய்துள்ளது. எனவே, சாதாரண மாடலைவிட ஏபிஎஸ் மாடலின் விலை சற்று அதிகமாகவே இருக்கும். இருந்தாலும், பாதுகாப்பு அதிகரிக்கும்.

மஹிந்திரா மோஜோ பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 295சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க்கையும் இந்த எஞ்சின் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

More from DriveSpark

Article Published On: Monday, November 23, 2015, 10:02 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+