ஆஹோ, ஓஹோ, அற்புதம்... அழகில் மட்டுமல்ல, விலையிலும் உலகின் நம்பர்-1!!

By Saravana

பணக்காரர்களுக்கான மோட்டார் உலகத்திற்கு, இந்த செய்தியின் மீண்டும் ஒருமுறை கொண்டு செல்கிறோம். ஆம், அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த பைக்தான் உலகின் விலையிலும், அழகிலும் முதன்மையானதாக இருக்கப் போகிறது.

அசத்தலான இந்த புதிய பைக் மாடலின் சிறப்பம்சங்களையும், படங்களையும் ஸ்லைடரில் உங்கள் கண் முன் கடை விரிக்கிறது டிரைவ்ஸ்பார்க் தமிழ். வாருங்கள் ஸ்லைடருக்கு செல்லலாம்.

டிசைனர்

டிசைனர்

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டிசைனர் யகூபா காலே எண்ணத்தில் உருவாகியிருக்கிறது. கேடிஎம், எம்வி அகஸ்ட்டா நிறுவனங்களின் பைக்குகளை டிசைன் செய்த பெருமையுடன், பைக்குகளை டெஸ்ட் டிரைவ் செய்த அனுபவம், 10 ஆண்டுகள் ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர், வாகன விளம்பர வீடியோ தயாரிப்பாளர் என்ற பன்முக திறமை கொண்ட இவர் தற்போது சொந்த பிராண்டில் உருவாக்கியிருக்கும் பைக் மாடல் இது.

பைக் விபரம்

பைக் விபரம்

ஃபெலின் ஒன் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மோட்டார்சை்கிள், எதிர்கால மோட்டார்சைக்கிள் டிசைனுக்கு முன்மாதிரி மாடலாக இருக்கும் என நம்பப்படுகிறது. டிசைனில் மட்டுமல்ல, தொழில்நுட்பத்திலும் பல படிகள் முன்னே நிற்கும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த ஃபெலின் ஒன் பைக்கில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 801சிசி எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பைக் வெறும் 155 கிலோ மட்டுமே எடை கொண்டிருக்கும் என்பதால், எடைக்கும், பவர் வெளிப்படுத்தும் திறனுக்குமான விகிதாச்சராம் மிகச்சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஃப்ரேம்

ஃப்ரேம்

விமானங்களில் பயன்படுத்தப்படும் உயர்வகை அலுமினியம், டைட்டானியம் மற்றும் கார்பன் ஃபைபர் பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உயர்வகை லெதர் இருக்கை பொருத்தப்பட்டு இருக்கிறது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

எலக்ட்ரானிக் டேஷ்போர்டு, எலக்ட்ரானிக் கன்ட்ரோல் முன்புற சஸ்பென்ஷன் அமைப்பு, டைட்டானியம் எக்ஸ்சாஸ்ட் குழாய், கார்பன் கலப்பு உலோக ஸ்விங் ஆர்ம், டைட்டானியம் ஃப்ரேம் போன்றவை பல சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.

 விற்பனை எண்ணிக்கை

விற்பனை எண்ணிக்கை

மொத்தமாக 50 எண்ணிக்கையில் மட்டுமே ஃபெலின் ஒன் விற்பனை செய்யப்பட உள்ளது.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படி, வரும்போது, உலகின் அதிக விலை கொண்ட பைக் மாடல் என்ற பெருமையை பெறும். அப்படியென்றால், இதன் விலை என்னவாக இருக்கும். அடுத்த ஸ்லைடில் வியக்கலாம்.

 விலை

விலை

ரூ.2.80 லட்சம் டாலர் விலையில், நம்மூர் மதிப்பில் ரூ.1.75 கோடி விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதன் டிசைனை பார்த்து, விலையை ஒரு பொருட்டாக மதிக்காமல், அடித்து பிடித்து வாங்க பல கோடீஸ்வரர்கள் தயாராக இருப்பார்கள் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
Here given some interesting details of Feline One Bike concept.
Story first published: Friday, August 28, 2015, 14:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X