எம்வி அகுஸ்ட்டா சூப்பர் பைக்குகள் இந்தியா வருகின்றன...!!
இத்தாலியை சேர்ந்த புகழ்பெற்ற எம்வி அகுஸ்ட்டா சூப்பர் பைக் நிறுவனம் இந்தியாவில் விரைவில் கால் பதிக்க உள்ளது.
வரும் நவம்பர் மாதம் முதல் தனது பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது எம்வி அகுஸ்ட்டா. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கூட்டணி
புனே நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கைனெட்டிக் நிறுவனத்தின் கூட்டணியுடன், இந்தியாவில் சூப்பர் பைக் விற்பனையை எம்வி அகுஸ்ட்டா துவங்க இருக்கிறது.

மாடல்கள்
தற்போது எம்வி அகுஸ்ட்டா நிறுவனத்திடம் புரூட்டேல், ரைவல், எஃப்3, டூரிஷ்மோ வெலாஸ் மற்றும் எஃப்4 ஆகிய உயர்வகை பைக் மாடல்கள் உள்ளன. இந்தநிலையில், அனைத்து மாடல்களையும், அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

விலை பட்டியல்
ரூ.12 லட்சம் முதல் ரூ.33 லட்சம் வரையிலான விலைப் பட்டியலில் எம்வி அகுஸ்ட்டா பைக்குகள் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் மாடல்
வரும் நவம்பர் மாதம் முதல் எம்வி அகுஸ்ட்டா பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக கைனெட்டிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








