பஜாஜ் அவென்ஜர் பைக் 150சிசி எஞ்சின் மாடலிலும் வருகிறது!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய பஜாஜ் அவென்ஜர் பைக் 150சிசி எஞ்சின் மாடலிலும் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர்த்து, 220சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட ஸ்ட்ரீட் மற்றும் க்ரூஸர் ஆகிய இரு மாடல்களில் வருகிறது. பஜாஜ் அவென்ஜர் பைக்கின் மூன்று புதிய மாடல்கள் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட்
ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மாடலின் தோற்றத்தை ஒத்திருக்கும் இந்த மாடல் 220 ஸ்ட்ரீட் என்ற பெயரில் வருகிறது. இந்த மாடல் முழுவதும் கருப்பு நிற அலங்காரத்தில் வருகிறது.
Photo Credit: Mohan Kumar

பிளாக் எடிசன்
கருப்பு நிற கஸ்டமைஸ் அலாய் வீல்கள், எஞ்சின், கிராப் ரெயில் என முழுவதும் கருப்பு நிறத்தில் கஸ்டமைஸ் பைக் மாடலாக வருகிறது.
Photo Credit: Mohan Kumar

அவென்ஜர் 220 க்ரூஸர்
இது ஓர் முழுமையான க்ரூஸர் பைக் மாடலாக இருக்கும். அதிக அளவில் க்ரோம் பூச்சு கொண்ட பாகங்கள் கொடுக்கப்பட்டு பிரிமியம் அவென்ஜர் மாடலாக வருகிறது. ஸ்போக்ஸ் கொண்ட சக்கரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.
Photo Source: Motoroids

அவென்ஜர் 150
பஜாஜ் அவென்ஜர் பைக் 220சிசி எஞ்சின் மட்டுமின்றி, புதிய 150சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலிலும் வருவதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாடல் விலை மிக குறைவாக இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்பதுடன், அவென்ஜர் விற்பனையை புதிய இலக்குகளை நோக்கி பயணிக்க வைக்கும் என பஜாஜ் ஆட்டோ நம்புகிறது.
Photo Source: Motoroids

150சிசி எஞ்சின்
பஜாஜ் பல்சர் ஏஎஸ்150 பைக் மாடலிலும் இருக்கும் அதே எஞ்சின் இந்த புதிய மாடலில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 17 பிஎஸ் பவரையும், 13 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கும்.
Photo Credit: Mohan Kumar

அறிமுகம்
வரும் 28ந் தேதி புதிய பஜாஜ் அவென்ஜர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Photo Credit: Mohan Kumar


Click it and Unblock the Notifications








