புதிய வண்ணங்களில் ஹோண்டா சிபிஆர் 150ஆர் மற்றும் சிபிஆர் 250ஆர் பைக்குகள் அறிமுகம்!

By Saravana

புதிய பொலிவுடன் ஹோண்டா சிபிஆர் 150ஆர் மற்றும் சிபிஆர் 250ஆர் பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

டிசைனிலும், எஞ்சினிலும் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. புதிய பைக் மாடல்களின் வண்ணங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய ஹோண்டா சிபிஆர் 150ஆர் வண்ணங்கள்

புதிய ஹோண்டா சிபிஆர் 150ஆர் வண்ணங்கள்

ஜாஸி புளூ மெட்டாலிக், ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் பால்ம் க்ரீன் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். புதிய கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்களும் இடம்பெற்றிருக்கின்றன. முதல் மூன்று ஸ்லைடுகளில் ஹோண்டா சிபிஆர் 150ஆர் பைக்கின் புதிய வண்ணங்களை காணலாம்.

 எஞ்சின்

எஞ்சின்

ஹோண்டா சிபிஆர் 150ஆர் பைக்கின் எஞ்சினில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இதுவரை விற்பனையில் இருந்த மாடலில் இருந்த அதே 149.4சிசி லிக்யூடு கூல்டு சிஸ்டம் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 18.28பிஎச்பி பவரையும், 12.66 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

சென்னை ஆன்ரோடு விலை

சென்னை ஆன்ரோடு விலை

புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஹோண்டா சிபிஆர் 150ஆர் பைக் சென்னையில் ரூ.1,40,300 ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு கிடைக்கும். முன்புறம், பின்புறத்தில் டிஸ்க் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக கூட வழங்கப்படவில்லை. அடுத்த மூன்று ஸ்லைடுகளில் புதிய ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கின் விபரங்களை காணலாம்.

2016 ஹோண்டா சிபிஆர் 250ஆர்

2016 ஹோண்டா சிபிஆர் 250ஆர்

ஸ்போர்ட்ஸ் ரெட் என்ற சிவப்பு வண்ணத்திலும், பியர்ல் அமேஸிங் ஒயிட் என்ற வெள்ளை வண்ணத்திலும் மற்றும் புதிய கருப்பு வண்ணத்திலும் கிடைக்கும். புதிய கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்களும் இந்த மாடலை புதிதாக காண்பிக்கிறது. தொடர்ந்து மூன்று ஸ்லைடுகளில் புதிய வண்ணங்களில் வந்திருக்கும் ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கின் படங்களை காணலாம்.

 எஞ்சின்

எஞ்சின்

ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கில் 249.6சிசி லிக்யூடு கூல்டு சிஸ்டம் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 26.15பிஎச்பி பவரையும், 23 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

சென்னை ஆன்ரோடு விலை

சென்னை ஆன்ரோடு விலை

சென்னையில் புதிய ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கின் ஸ்டான்டர்டு மாடல் ரூ.1,81,500 ஆன்ரோடு விலையிலும், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொண்ட மாடல் ரூ.2,13,800 ஆன்ரோடு விலையிலும் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 10, 2015, 14:38 [IST]
English summary
Honda Motorcycle and Scooter India updates the CBR150R and CBR250R motorcycles. Honda has provided both the motorcycles with new paint schemes, graphic decals, and pricing as well.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+