ஸ்டைல் விரும்பிகளுக்கு சரியான சாய்ஸ்... வந்துவிட்டது புதிய யமஹா ஃபேசினோ!!
இந்தியாவில் புத்தம் புதிய ஸ்கூட்டர் மாடலை யமஹா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் யமஹா ஃபேசினோ என்ற இந்த புதிய 113சிசி ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இதுவரை அறிமுகம் செய்யப்பட்ட யமஹா மாடல்களில் இது சற்று பிரிமியம் மாடலாக வந்துள்ளது. படங்கள், கூடுதல் தகவல்கள் சுடச்சுட ஸ்லைடரில் காத்திருக்கிறது.

01. டிசைன்
இந்த ஸ்கூட்டரின் டிசைன் மிகவும் பிரத்யேகமாகவும், பழமையும் புதுமையும் கலந்த கலவையாக வந்திருக்கிறது. இதன் ஹெட்லைட், பின்புற டிசைன் பழமையான டிசைன் தாத்பரியத்துடன், க்ரோம் பூச்சு கொண்ட பாகங்களால் ஜொலிக்கிறது. மேலும், இதன் மீட்டர் கன்சோல் பிரிமியமாக இருக்கிறது. பக்கவாட்டு டிசைன், கிராப் ரெயில், ரியர் வியூ கண்ணாடிகள் ஆகியவை மிக ஸ்டைலாக டிசைன் செய்யப்பட்டுள்ளன.

02. வடிவம்
இந்த ஸ்கூட்டர்1,185மிமீ நீளமும், 675மிமீ அகலமும், 1,120மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1,270மிமீ வீல்பேஸ் உடையது. மேலும், இந்த ஸ்கூட்டர் வெறும் 103 கிலோ மட்டுமே எடை கொண்டது. இதுவரை வெளிவந்த யமஹா ஸ்கூட்டர்களிலேயே இலகு மாடல் இதுதான்.

03. எஞ்சின்
யமஹா ஃபேசினோ ஸ்கூட்டரில் இருக்கும் 113சிசி ஏர்கூல்டு எஞ்சின் 7.1 பிஎஸ் பவரையும், 8.1 என்எம் டார்க்கையும் வழங்கும். இதில், சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

04. மைலேஜ்
இந்த ஸ்கூட்டர் சோதனை நிலைகளில் லிட்டருக்கு 66 கிமீ மைலேஜ் தரும் என்று யமஹா தெரிவிக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 5.2 லிட்டர் கொள்ளளவு பெட்ரோல் டேங்க் இருக்கிறது.

05. பிரேக் சிஸ்டம்
புதிய யமஹா ஃபேசினோ ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இல்லை. இருசக்கரங்களிலும் டிரம் பிரேக்குகளே உள்ளன. 90/100- 10 53ஜே ட்யூப் உள்ள டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

06. மேட் இன் சென்னை
இந்த புதிய யமஹா ஃபேசினோ ஸ்கூட்டர் சென்னையிலுள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

07. விலை விபரம்
ரூ.52,500 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய யமஹா ஃபேசினோ ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








