இந்தியாவில் அப்ரிலியா 125சிசி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் பியாஜியோ!
இந்தியாவில் புதிய அப்ரிலியா 125சிசி ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய பியாஜியோ திட்டமிட்டிருக்கிறது. வெஸ்பா பிராண்டுக்கு அடுத்ததாக, இந்த புதிய பிராண்டையும் இந்திய மார்க்கெட்டில் களமிறக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும், அப்ரிலியா எஸ்ஆர் மோட்டார்டு 125 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான அனுமதியையும் பியாஜியோ பெற்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இளைஞர்களை கவரும்...
புதிய அப்ரிலியா எஸ்ஆர் மோட்டார்டு 125 ஸ்கூட்டரின் டிசைன், ஸ்டிக்கர் ஆகியவை ஒரு கஸ்டமைஸ் மாடல் போன்றே தோற்றமளிப்பதால், இளைஞர்களை வெகுவாக கவரும் வாய்ப்புள்ளது.

எஞ்சின்
இந்த ஸ்கூட்டரில் 9.3 பிஎஸ் பவரையும், 8.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 125சிசி எஞ்சின் உள்ளது. சிவிடி கியர்பாக்ஸ் கொண்டது. இது 125 ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நெருக்கடியை தரும் மாடலாக எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்க் பிரேக்
முன்புறத்தில் 220மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 140மிமீ டிரம் பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

சக்கரங்கள்
அப்ரிலியா எஸ்ஆர் மோட்டார்டு 125 ஸ்கூட்டரில் 14 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும், 775மிமீ உயரத்திலான இருக்கை அமைப்பும் இந்திய சாலை நிலைகளுக்கு மிக ஏற்ற மாடலாக இருக்கும்.

எடை
இந்த ஸ்கூட்டரில் 1.5 லிட்டர் ரிசர்வ் கொண்ட 7 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது. மொத்த எடை 122 கிலோ.

எதிர்பார்க்கும் விலை
இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு அனுமதி கிடைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு இந்த புதிய ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. ரூ.75,000 விலையில் இந்த புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீலர் நெட்வொர்க்
பெரிய அளவிலான ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நிலைப்பதற்கு டீலர் கட்டமைப்பு அவசியம். ஆனால், அந்தளவுக்கு அப்ரிலியாவுக்கு டீலர் மற்றும் சர்வீஸ் மையங்களின் கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்பது பெரிய குறை. இதனை நிவர்த்தி செய்தால் மட்டுமே சிறப்பான வர்த்தக வளர்ச்சியை இந்த ஸ்கூட்டரால் பதிவு செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications








