ராயல் என்ஃபீல்டு ஜிடி இனி கறுப்பு வண்ணத்திலும் கிடைக்கும்!
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கஃபே ரேஸர் பைக் மாடலான கான்டினென்டல் ஜிடி தற்போது புதிய வண்ணத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த பைக் தற்போது கறுப்பு வண்ணத்திலும் கிடைக்கும்.

இந்த கஃபே ரேஸர் வகை பைக்கில் 29.1 பிஎச்பி பவரையும், 44 என்எம் டார்க்கையும் வழங்கும் 535சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது.
பல்வேறு சிறப்பு ஆக்சஸெரீகள் கொண்டதாக கிடைக்கும் இந்த பைக் ரூ.1.93 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








