ஆன்லைன் ஸ்டோர் திறந்தது ராயல் என்ஃபீல்டு... தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!!

By Saravana

பைக் ஓட்டுனர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கான புதிய இணையதளத்தை ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் திறந்திருக்கிறது.

இந்த புதிய ஆன்லைன் ஸ்டோர் மூலம் மிக எளிதாக பொருட்களை ஆர்டர் செய்து பெறும் வசதியை உரிமையாளர்களும், ராயல் என்ஃபீல்டு பைக் பிரியர்களும் பெற முடியும். ராயல் என்ஃபீல்டு ஆன்லைன் ஸ்டோர் பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. விற்பனை பொருட்கள்

01. விற்பனை பொருட்கள்

ஆன்லைன் ஸ்டோர் மூலமாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் உயர்தரமான காலணிகள், கையுறைகள், தலைக்கவசங்கள், பனியன்கள் மற்றும் தோலிலான மேல்சட்டை[ஜாக்கெட்] போன்றவற்றை ஆர்டர் செய்து பெற முடியும்.

 02. விலை விபரம்

02. விலை விபரம்

  • காலணிகள்: ரூ.5,099 முதல் ரூ.7,099 வரை
  • தலைக்கவசங்கள்: ரூ.1,799 முதல் ரூ.4,799 வரை
  • தோலிலான கையுறைகள்: ரூ.1,899 முதல் ரூ.2,999 வரை
  • பாதுகாப்பை தரும் முழு கால்சட்டை: ரூ.2,799 முதல் ரூ.5,499 வரை
  • தோல் மேல்சட்டை: ரூ.5,999 முதல் ரூ18,999 வரை
  • 03. பணம் செலுத்தும் முறை

    03. பணம் செலுத்தும் முறை

    இணையதள பணபரிவர்த்தனை, கடன் அட்டை மூலமாக ஆர்டர் செய்யும் வசதி உள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் எளிதாக இந்த பொருட்களை ஆர்டர் செய்து பெற முடியும்.

    04. வீட்டிற்கு டெலிவிரி

    04. வீட்டிற்கு டெலிவிரி

    இதுவரை பெருநகரங்களில் உள்ள ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் ஷோரூம்களில் மட்டுமே இந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், இனி ஆன்லைன் மூலமாக இந்த பொருட்களை ஆர்டர் செய்து வீட்டிலிருந்தபடியே பெற முடியும்.

    05. இணையதள முகவரி

    05. இணையதள முகவரி

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் விற்பனை பொருட்களை ஆர்டர் செய்து பெறுவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 30, 2015, 10:00 [IST]
English summary
Indian two-wheeler manufacturer, Royal Enfield has begun its online merchandise store. Now their loyal bike owners can opt for their preferred products from the comfort of their homes.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+