சென்னையில் மூன்றாவது ஆலையை அமைக்க ராயல் என்ஃபீல்டு திட்டம்!
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மூன்றாவது உற்பத்தி மையமும் தமிழகத்தில் அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
உலகின் மிகவும் பழமைவாய்ந்த மோட்டர்சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ராயல் என்ஃபீல்டு. இந்நிறுவனம், தங்களது மூன்றாவது உற்பத்தி மையத்தையும் தமிழ்நாட்டில் நிறுவ திட்டமிட்டுள்ளனர்.
ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும், ராயல் என்ஃபீல்டு, சென்னை புறநகர் பகுதிகளில் இரண்டு உற்பத்தி மையங்களை இயக்கி வருகின்றனர். அதிகரிக்கபட்ட உற்பத்தி திட்டங்களின் படி, 2015-ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த இரு மையங்களில் இருந்து மட்டும், ஆண்டுக்கு 4.5 லட்சம் மோட்டர்சைக்கிள்களை தயாரிக்க உத்தேசித்துள்ளனர்.
அனைத்து நடவடிக்கைகளும் வெற்றிகரமாக நிகழ்ந்து கொண்டிருப்பதை அடுத்து, மூன்றாவது உற்பத்தி மையத்தையும் துவக்குவதற்கான திட்டங்கள் மும்மரமாக நடை பெற்று கொண்டிருக்கிறது.

இந்த மூன்றாவது உற்பத்தி மையமும், முழு செயல்பாட்டிற்கு வரும் போது, தற்போதைய உற்பத்தி திறனான வருடத்திற்கு 4.5 லட்சங்கள் மோட்டர்சைக்கிள்கள் என்ற அளவில் இருந்து, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் உற்பத்தி திறன் 9 லட்சம் மோட்டர்சைக்கிள்கள் என்ற அளவை எட்டிவிடும்.
ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் எம்டி சித்தார்த் லால், மூன்றாவது உற்பத்தி மையத்தை நிறுவும் திட்டம் உறுதி செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் வள்ளம் வடகல் என்ற இடத்தில் துவக்கபட உள்ள இந்த உற்பத்தி மையம், எந்த அளவிலான முதலீடுகளுடன் துவக்கப்பட உள்ளது என்பது, 2016 பிப்ரவரியில் தான் இறுதி செய்யப்படும் என தெரிகிறது.
புதிய வாகனங்களின் அறிமுகங்கள் குறித்து கருத்து தெரிவித்த, எம்டி சித்தார்த லால், ராயல் என்ஃபீல்டு இன்னும் இரண்டும் புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறினார். ஒரு மோட்டர்சைக்கிள் 2016-ஆம் ஆண்டு துவக்கதிலும், மற்றொரு மோட்டர்சைக்கிள் 2017-ஆம் ஆண்டிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியா முழுவதும் 500 டீலர்ஷிப்களை நிறுவ, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








