கவாஸாகிக்கு போட்டியாக 2 சூப்பர் பைக்குகளை களமிறக்கும் சுஸுகி!
கவாஸாகி நிறுவனம் தொடர்ந்து சூப்பர் பைக்குகளை களமிறக்கி வரும் நிலையில், அதற்கு போட்டியான வேலைகளில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனமும் இறங்கியுள்ளது.
வரும் ஜூன் மாதத்தில் இரண்டு புதிய 1000சிசி சூப்பர் பைக் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது சுஸுகி. இந்த இரு பைக்களும் வர இருப்பதை சுஸுகி தனது இணையதளத்தின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

மாடல்கள்
சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் - எஸ்1000 மற்றும் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்1000எஃப் என்ற புதிய மாடல்களை சுஸுகி இந்தியாவில் களமிறக்க உள்ளது. இதில், முதலாவது மாடல் நேக்டு பாடி ஸ்டைல் கொண்டதாகவும், இரண்டாவது மாடல் ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட சூப்பர் பைக் மாடலாகவும் இருக்கும்.

இறக்குமதி மாடல்?
இவை இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுமா அல்லது இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுமா என்பது குறித்த தகவல் இல்லை.

எஞ்சின் விபரம்
இரண்டு பைக் மாடல்களிலும் ஒரே எஞ்சின்தான் இடம்பெற்றிருக்கும். இந்த பைக்குகளில் 144 எச்பி பவரையும், 105.75 என்எம் டார்க்கையும் வழங்கும் 999சிசி 4 சிலிண்டர் எஞ்சின் இருக்கும். ப்யூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கான்ஸ்டன்ட் மெஷ் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்
இரண்டு பைக் மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தரமான பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கும்.

வண்ணங்கள்
மெட்டாலிக் ட்ரிட்டன் புளூ, கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் அல்லது கேண்டி டேரிங் ரெட் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.

எதிர்பார்க்கும் விலை
இந்த இரு மாடல்களும் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் இடைப்பட்ட விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








