அட்டகாசமான இரட்டை வண்ணங்களில் சுஸுகி லெட்ஸ் ஸ்கூட்டர்!
அட்டகாசமான மூன்றுவிதமான இரட்டை வண்ணக் கலவைகளில் சுஸுகி லெட்ஸ் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இந்த புதிய இரட்டை வண்ணக் கலவைகளில் சுஸுகி லெட்ஸ் வந்துள்ளது. புதிய வண்ணக் கலவை மாடல்களின் படங்கள் மற்றும் விலை விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய வண்ணங்கள்...
சாம்பல் மற்றும் கருப்பு வண்ணக் கலவை, சிவப்பு மற்றும் கருப்பு வண்ணக் கலவை, நீலம் மற்றும் கருப்பு வண்ணக் கலவை என மூன்றுவிதமாக கிடைக்கும்.

மற்றொரு புதிய வண்ணம்
இரட்டை வண்ணங்கள் தவிர்த்து, பியர்ல் மிராஜ் ஒயிட் என்ற வெள்ளை வண்ணத்திலும் கிடைக்கும்.

விலை விபரம்
புதிய இரட்டை வண்ணக் கலவை மாடல்கள் ரூ.46,597 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

எஞ்சின்
சுஸுகி லெட்ஸ் ஸ்கூட்டரில் 112.8சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 8.7 எச்பி பவரையும், 9 என்எம் டார்க்கையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் கொண்டது. லிட்டருக்கு 63 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்
மொபைல்சார்ஜர், ட்யூப்லெஸ் டயர்கள், டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், இருக்கை, இக்னிஷன் மற்றும் ஹேண்டில்பார் போன்றவற்றிற்கான ஒருங்கிணைந்த லாக் சிஸ்டம், மெயின்டனென்ஸ் ஃப்ரீ பேட்டரி, 5.2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க், கையாள்வதற்கு எளிதான 98 கிலோ எடை, 765மிமீ உயரம் கொண்ட இருக்கை அமைப்பு, சிறப்பான ஸ்டோரேஜ் வசதி ஆகியவற்றுடன் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








