யமஹா உயரே பறக்கச் செய்த ஃபேஸினோ... விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள்!

By Saravana

பைக் விற்பனையைவிட ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் கண்டு வருகிறது. இதையடுத்து, புதிய புதிய ஸ்கூட்டர் மாடல்களை இருசக்கர வாகன நிறுவனங்கள் தொடர்ந்து களமிறக்கி வருகின்றன. இதனால், ஸ்கூட்டர் மார்க்கெட்டில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த போட்டிகளையும் சமாளித்து விற்பனையில் சிறப்பான இலக்கை பதிவு செய்து வரும் ஸ்கூட்டர்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கடந்த மாதம் விற்பனையில் டாப் 10 இடங்களை பிடித்த ஸ்கூட்டர் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

10. டிவிஎஸ் ஸெஸ்ட் 110

10. டிவிஎஸ் ஸெஸ்ட் 110

கடந்த மாதம் டாப் 10 பட்டியலில் 10வது இடத்தில் டிவிஎஸ் ஸெஸ்ட் உள்ளது. மார்க்கெட்டில் சிறந்த லைட் வெயிட் ஸ்கூட்டர். பட்ஜெட் விலையில் ஓர் சிறப்பான மாடலாக இருப்பதும், முதல்முறையாக ஸ்கூட்டர் ஓட்ட கற்றுக் கொள்ளும் பெண்களும் இந்த ஸ்கூட்டரை விரும்பி தேர்வு செய்கின்றனர். கடந்த மாதம் 8,880 டிவிஎஸ் ஸெஸ்ட் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன.

09. ஹோண்டா ஏவியேட்டர்

09. ஹோண்டா ஏவியேட்டர்

யமஹா ரே, ஃபேசினோ ஸ்கூட்டர்களால் கிடுகிடுவென கீழே இறங்கி வருகிறது ஹோண்டா ஏவியேட்டர். கடந்த மாதம் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. ஹோண்டாவின் நம்பகமான எஞ்சின் கொண்டிருந்தாலும், ஆக்டிவா அளவுக்கு வாடிக்கையாளர்களை கவரவில்லை. கடந்த மாதம் 9,436 ஏவியேட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

08. யமஹா ரே

08. யமஹா ரே

கடந்த மாத நிலவரப்படி, யமஹா ரே ஸ்கூட்டர் 8 வது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 11,865 யமஹா ரே ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. மேலும், யமஹா இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனையிலும் இந்த ஸ்கூட்டர் மிக முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. மாறுபட்ட டிசைன், சிறப்பான எஞ்சின் ஆகியவை இந்த ஸ்கூட்டரின் விற்பனையை தூக்கி நிறுத்தி வருகிறது.

07. யமஹா ஃபேசினோ

07. யமஹா ஃபேசினோ

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு மிக குறுகிய காலத்தில், டாப் 10 பட்டியலில் இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் இடம்பெற்றதுடன், கிடுகிடுவென மேலே முன்னேறி வருகிறது. கடந்த மாதம் 13,478 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. அத்துடன், கடந்த மாதம் யமஹா இந்தியா நிறுவனத்தின் விற்பனை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டதற்கு யமஹா ரே மற்றும் யமஹா ஃபேசினோ ஸ்கூட்டர்களின் பங்களிப்பு மிக காரணமாக இருந்தது. யமஹா ஃபேசினோவின் டிசைன் அனைவரையும் கவர்ந்துவிட்டதும், அதன் விலையும் தோதாக இருப்பதும் இந்த ஸ்கூட்டரின் விற்பனையை இன்னும் அதிகரிக்கும் என நம்பலாம்.

06. ஹோண்டா ப்ளஷர்

06. ஹோண்டா ப்ளஷர்

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தயாரிப்பு. பெண்களுக்கான மிகச்சிறந்த ஸ்கூட்டர் மாடல் என்பதால், மிக நீண்டகாலமாக மார்க்கெட்டில் சீரான விற்பனையை பதிவு செய்து வருகிறது. கடந்த மாதம் 15,826 யமஹா ஃபேசினோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

05. சுஸுகி ஆக்செஸ்

05. சுஸுகி ஆக்செஸ்

சுஸுகி நிறுவனத்தின் மிக வெற்றிகரமான 125சிசி ஸ்கூட்டர் மாடல். கடந்த மாதம் 5வது இடத்தை பிடித்திருக்கிறது. செயல்திறன் மிக்க எஞ்சின் என்பதே இதன் முக்கிய ப்ளஸ் பாயிண்ட். கடந்த மாதம் 18,090 சுஸுகி ஆக்செஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

04. ஹோண்டா டியோ

04. ஹோண்டா டியோ

மிக ஸ்டைலான தோற்றம் கொண்ட ஹோண்டா டியோ ஸ்கூட்டர் கல்லூரி செல்லும் யுவன், யுவதிகள் மத்தியில் பிரபலம். அசத்தலான தோற்றம் என்பதோடு, சிறந்த செயல்திறன் கொண்ட எஞ்சினும் இளம் வயது வாடிக்கையாளர்களை கவர்ந்த ஒன்றாக இருக்கிறது. கடந்த மாதம் 19,536 டியோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இலகு எடை, சரியான பட்ஜெட்டில் இந்த ஸ்கூட்டர் கிடைக்கிறது.

 03. ஹீரோ மேஸ்ட்ரோ

03. ஹீரோ மேஸ்ட்ரோ

ஹீரோ நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகிறது. கடந்த மாதம் மூன்றாம் இடத்தில் இருக்கும் ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டர் 31,562 என்ற ஓர் நல்ல விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. ஹோண்டா ஆக்டிவா அடிப்படையிலான மாடலாக இருந்தாலும், சில கூடுதல் கவர்ச்சி அம்சங்களுடன் தனக்கான வாடிக்கையாளர்களை சேர்த்து வருகிறது.

 02. டிவிஎஸ் ஜுபிடர்

02. டிவிஎஸ் ஜுபிடர்

ஹோண்டா ஆக்டிவா மார்க்கெட்டை குறி வைத்து இறக்கப்பட்ட டிவிஎஸ் ஜுபிடர் தனது வேலையை கச்சிதமாக செய்து வருகிறது. கடந்த மாதம் இரண்டாவது இடத்தில் இருக்கும் டிவிஎஸ் ஜுபிடர், விற்பனையில் டாப் 10 டூ வீலர்களின் பட்டியலிலும் இடம்பெற்று அசத்தி வருகிறது. டிசைன், சிறப்பம்சங்கள், விலை ஆகியவை இந்த ஸ்கூட்டருக்கான மார்க்கெட்டை ஸ்திரமாக்கியுள்ளது.

01. ஹோண்டா ஆக்டிவா

01. ஹோண்டா ஆக்டிவா

பைக் மார்க்கெட்டை உடைத்து புதிய சரித்திரம் எழுதி வருகிறது ஹோண்டா ஆக்டிவா. இந்த பட்டியில் இருக்கும் அனைத்து ஸ்கூட்டர்களின் விற்பனையை இந்த ஒரே பிராண்டு மூலமாக ஹோண்டா பெற்று வருகிறது. அத்துடன், போட்டியாளர்கள் நெருங்கவே முடியாத உச்சாணி கொம்பில் அமர்ந்துள்ளது. கடந்த மாதம் 2,17,819 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 இருசக்கர வாகன மாடலாகவும் இருந்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 25, 2015, 11:26 [IST]
English summary
Top 10 Best Selling Scooters In August 2015.
மேலும்... #டாப் 10 #top 10
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+