நம்பர் 1 இடத்தை வலுவாக்கிய ஹோண்டா ஆக்டிவா... ஆகஸ்டில் டாப் 10 டூ வீலர்கள்!!

By Saravana

ஆகஸ்ட்டிலும் ஹோண்டா ஆக்டிவா விற்பனையில் அனல் பறந்தது. நம்பர்- 1 இடத்திலிருந்த ஹீரோ ஸ்பிளென்டருக்கு வாய்ப்பே கொடுக்காமல், தொடர்ந்து மூன்றாவது மாதமாக, ஆக்டிவா முன்னிலை பெற்றது.

இதனால், நம்பர்- 1 இடம் ஹோண்டா ஆக்டிவாவின் ஆஸ்தான ஸ்தலமாக மாறி வருகிறது. இவை தவிர்த்து, கடந்த மாதத்தில் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்து அசத்திய டூ வீலர்களையும், விற்பனை எண்ணிக்கை விபரங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

10. பஜாஜ் சிடி 100

10. பஜாஜ் சிடி 100

கடந்த ஜூலை மாதம் போன்றே ஆகஸ்ட்டிலும் பஜாஜ் சிடி 100 பைக் பட்டியலில் 10வது இடத்தை தக்க வைத்தது. கடந்த ஜூலையில் 42,829 பஜாஜ் சிடி 100 பைக்குகள் விற்பனையான நிலையில், கடந்த மாதம் 38,412 பைக்குகள் மட்டுமே விற்பனையானது. இருப்பினும், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துக்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. விலை, மைலேஜ் போன்றவை இதனை கிராமப்புற மார்க்கெட்டில் தனி இடத்தை பெற்றுத் தந்துள்ளது.

09. டிவிஎஸ் ஜுபிடர்

09. டிவிஎஸ் ஜுபிடர்

கடந்த மாதமும் 9வது இடத்தை தக்க வைத்தது டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர். ஹோண்டா ஆக்டிவா 110சிசி மாடலை குறி வைத்து நிலைநிறுத்தப்பட்ட இந்த ஸ்கூட்டர் பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. கடந்த மாதம் 46,614 டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சிறப்பான டிசைன், சரியான விலை, வசதிகளுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

 08. பஜாஜ் பல்சர்

08. பஜாஜ் பல்சர்

பஜாஜ் நிறுவனத்திற்கு நன் மதிப்பை பெற்றுத் தந்த பல்சர் பிராண்டில் பல மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த மாதம் பல்சர் பிராண்டுக்கு டாப் 10 பட்டியலில் 8வது இடம் கிடைத்தது. கடந்த ஜூலையில் 50,270 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் 52,193 பல்சர் பைக்குகள் விற்பனையாகின. சிறப்பான செயல்திறனும், தொழில்நுட்பமும் கொண்ட எஞ்சின்கள், தோற்றம் போன்றவை பல்சருக்கான வெற்றியை தொடர்ந்து உறுதி செய்து வருகின்றன.

07. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

07. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

மொபட் மார்க்கெட்டில் தனிக்காட்டு ராஜாவாக டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட்டை வலம் வர செய்துள்ளது. விற்பனை கூடினாலும், குறைந்தாலும் போட்டி என்ற ஒன்று இங்கு இல்லை. கடந்த ஜூலையில் 59,863 டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட்டுகள் விற்பனையாகிய நிலையில், கடந்த மாதம் 55,132 மொபட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. வியாபாரிகளுக்கும், தனி நபர் பயன்பாட்டுக்கும் எளிய மற்றும் சிக்கனமான போக்குவரத்து சாதனம் என்பதே இதன் பலம்.

 06. ஹீரோ கிளாமர்

06. ஹீரோ கிளாமர்

ஹீரோ நிறுவனத்தின் விற்பனையில் முக்கிய பங்களிப்பை தந்து வரும் ஹீரோ கிளாமர் தொடர்ந்து 6வது இடத்தை தக்க வைத்தது. கடந்த ஜூலையில், 61,221 கிளாமர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் 55,944 கிளாமர் பைக்குகள் மட்டுமே விற்பனையானது. சரியான விலையில், சிறந்த எஞ்சின் கொண்ட பைக் மாடலாக வலம் வருகிறது.

05. ஹோண்டா சிபி ஷைன்

05. ஹோண்டா சிபி ஷைன்

டாப் 10 பட்டியலில் 5வது இடத்தை ஹோண்டா சிபி ஷைன் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. கடந்த ஜூலையில், 63,695 ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் 63,590 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. சிறந்த ரைடிங் பொசிஷன், மென்மையான, அதி செயல்திறன் மிக்க எஞ்சின் போன்றவை இதன் பக்கபலமாக விளங்குகிறது.

04. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்

04. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்

பட்ஜெட் விலையில் ஓர் அருமையான மாடலாக வலம் வருகிறது. நேர்த்தியான டிசைன், அதிக மைலேஜ் தரும் எஞ்சினுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. கடந்த ஜூலையில் 77,264 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 80,871 பைக்குகள் விற்பனையாகியுள்ளது. ஹீரோவுக்கு மிக முக்கிய பங்களிப்பையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.

03. ஹீரோ பேஷன்

03. ஹீரோ பேஷன்

ஹீரோவின் மிகவும் வெற்றிகரமான மாடலாக வலம் வரும் ஹீரோ பேஷன் பைக் தொடர்ந்து மூன்றாவது இடத்தை தக்க வைத்தது. கடந்த மாதம் 94,291 பேஷன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் 81,529 பைக்குகள் மட்டுமே விற்பனையானது. அதிக மைலேஜ், சிறந்த எஞ்சின், நேர்த்தியான தோற்றம் ஆகியவை இதன் மார்க்கெட்டை தக்க வைத்து வருகிறது.

02. ஹீரோ ஸ்பிளென்டர்

02. ஹீரோ ஸ்பிளென்டர்

நீண்ட காலமாக இந்தியாவின் நம்பர்- 1 டூ வீலர் என்ற பெருமையை பெற்று வந்த ஹீரோ ஸ்பிளென்டர் ஆக்டிவாவின் அசுர வேக வளர்ச்சியால், இரண்டாவது இடத்தையே பெற முடிந்தது. கடந்த மாதமும் ஆக்டிவாவை ஒன்றும் செய்ய முடியாமல், இரண்டாவது இடத்தை தக்க வைத்தது. கடந்த ஜூலை மாதத்தில் 1,77,016 ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் 1,81,933 ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனையாகின. விற்பனை சிறிது ஏற்றம் பெற்றாலும் ஹோண்டா ஆக்டிவாவை விரட்ட முடியாத நிலையில் உள்ளது ஸ்பிளென்டர்.

01. ஹோண்டா ஆக்டிவா

01. ஹோண்டா ஆக்டிவா

கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து நம்பர்- 1 இடத்தில் ஆக்டிவா இருந்து வருகிறது. கடந்த ஜூலையில், 2,25,704 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் 2,17,819 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், இரண்டாவது இடத்தில் உள்ள ஸ்பிளென்டரைவிட அதிக விற்பனை எண்ணிக்கை வித்தியாசத்தை கொண்டிருப்பதால், வரும் மாதங்களிலும் தனது நம்பர்- 1 இடத்தை ஹோண்டா ஆக்டிவா தக்க வைக்கும் என நம்பப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 18, 2015, 17:03 [IST]
English summary
Top 10 best selling two wheelers in August 2015.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+