ஸ்பிளென்டரை வீழ்த்தி புதிய உயரத்தில் ஆக்டிவா... ஜூலையில் டாப் 10 டூ வீலர்கள்!!

By Saravana

இந்தியாவின், டூ வீலர் மார்க்கெட்டில் நம்பர் -1 இடத்தில் இருந்த ஹீரோ ஸ்பிளென்டர் மோட்டார்சைக்கிளை பின்னுக்குத் தள்ளி நம்பர் - 1 இடத்தை தொடர்ந்து வலுவாக்கி வருகிறது ஹோண்டா ஆக்டிவா. அதுவும் கடந்த மாத விற்பனையை பார்க்கும்போது, ஸ்பிளென்டருக்கும், ஆக்டிவாவுக்குமான விற்பனை வித்தியாசம் மிகப்பெரியதாக இருக்கிறது.

இதனால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. கடந்த மாதம் ஹீரோ ஸ்பிளென்டர், ஹோண்டா ஆக்டிவா விற்பனை நிலவரம் உள்பட, இந்தியாவின் டாப் - 10 டூ வீலர்களின் விபரப் பட்டியலை பார்த்துவிடலாம்.

 10. பஜாஜ் சிடி 100

10. பஜாஜ் சிடி 100

கடந்த ஜூலையில் பஜாஜ் சிடி 100 பைக் பட்டியலில், 10வது இடத்தை பிடித்தது. கடந்த மாதம் 42,829 பஜாஜ் சிடி 100 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. பட்ஜெட் விலை, மைலேஜ் ஆகியவை காரணமாக இந்த பைக்கிற்கு கிராமப்புற மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

 09. டிவிஎஸ் ஜுபிடர்

09. டிவிஎஸ் ஜுபிடர்

ஹோண்டா ஆக்டிவா 110 மாடலை குறிவைத்து, டிவிஎஸ் மோட்டார்ஸ் இறக்கிய மாடல். கடந்த ஜூன் மாதம் முதல் டாப் 10 டூ வீலர்கள் பட்டியலில் இடம்பிடித்து வருகிறது. டிசைன், எஞ்சின், வசதிகள் என ஆக்டிவாவுக்கு நேர் மாற்றாக இருப்பதும், ஸ்கூட்டர் மார்க்கெட்டில் டிவிஎஸ் மோட்டார்ஸின் மீதான அனுபவமும் இந்த ஸ்கூட்டருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

 08. பஜாஜ் பல்சர்

08. பஜாஜ் பல்சர்

சேட்டக் ஸ்கூட்டருக்கு அடுத்து, பல்சர் பிராண்டுதான் பஜாஜ் நிறுவனத்துக்கு டூ வீலர் மார்க்கெட்டில் பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. கடந்த மாதம் 50,270 பல்சர் பைக்குகளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. டிசைன், செயல்திறன், எஞ்சின் போன்றவை பல்சர் பைக்குகளுக்கான வரவேற்பை தக்க வைத்து வருகிறது.

07. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

07. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

டாப் 10 டூ வீலர் பட்டியலில் தொடர்ந்து தன்னை தக்க வைத்து வருகிறது டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர். கடந்த மாதம் 59,863 எக்ஸ்எல் சூப்பர் மொபட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை இந்த மொபட் வழங்கி வருகிறது. ஓட்டுவது எளிது, எந்தவொரு சாலை நிலைகளுக்கும் சிறப்பானது, சிறு வியாபாரிகளின் உற்றத் தோழனாக தொடர்ந்து தன்னை தக்க வைத்து வருகிறது டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட்.

06. ஹீரோ கிளாமர்

06. ஹீரோ கிளாமர்

டாப் 10 பட்டியலில் ஹீரோ சார்பில் தொடர்ந்து தக்க வைத்து வரும் ஓர் பைக் மாடல் ஹீரோ கிளாமர். கடந்த மாதம் 61,221 ஹீரோ கிளாமர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. டிசைன், சிறந்த எஞ்சின், அதிக மைலேஜ் போன்றவை இந்த பைக்கிற்கான வரவேற்பை தொடர வைத்து வருகிறது.

05. ஹோண்டா சிபி ஷைன்

05. ஹோண்டா சிபி ஷைன்

இந்தியாவின் 125சிசி பைக் மார்க்கெட்டில் ஓர் சிறப்பான மாடலாக தொடர்ந்து வலம் வருகிறது. சிறப்பான ரைடிங் பொசிஷன், மென்மையான ஓட்டுதல் சுகத்தை தரும் எஞ்சின், அதிக மைலேஜ் போன்றவை இந்த பைக்கின் வெற்றிக்கான காரணங்கள். கடந்த மாதம் 63,695 சிபி ஷைன் பைக்குகளை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது.

 04. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்

04. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்

பட்ஜெட் விலையில் ஓர் சிறப்பான மாடல் என்பதே இதன் மிகப்பெரிய பலம். பட்ஜெட் பைக் என்று சொல்லமுடியாத அளவுக்கு நேர்த்தியான டிசைன், சிறந்த எஞ்சின், அதிக மைலேஜ், பட்ஜெட் விலை ஆகியவை இந்த பைக்கிற்கான வரவேற்பை தொடர வைத்து வருகிறது. கடந்த மாதம் 77,264 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

03. ஹீரோ பேஷன்

03. ஹீரோ பேஷன்

கடந்த மாதம் ஹீரோ பேஷன் பைக் 3வது இடத்தை பெற்றிருக்கிறது. டிசைன், அதிக மைலேஜ் போன்றவை இந்த பைக்கின் விற்பனை ஸ்திரமாக இருப்பதற்கான காரணங்கள். கடந்த மாதம் 94,291 பேஷன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. ஆனாலும், விற்பனையில் சிறிய தொய்வு காணப்படுவது ஹீரோ நிறுவனத்தை கவலை கொள்ளச் செய்யும் விஷயமாக இருக்கிறது.

 02. ஹீரோ ஸ்பிளென்டர்

02. ஹீரோ ஸ்பிளென்டர்

நீண்ட காலமாக இந்தியாவின் நம்பர்- 1 பைக் மாடல் என்ற பெருமையை தக்க வைத்து வந்த, ஹீரோ ஸ்பிளென்டருக்கு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரால் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. கடந்த மாதம் 1,77,016 ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இருப்பினும், இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதும், விற்பனையில் சரிவு காணப்படுவதும் ஹீரோவுக்கு கொஞ்சம் நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 01. ஹோண்டா ஆக்டிவா

01. ஹோண்டா ஆக்டிவா

விற்பனையில் ஹோண்டா ஆக்டிவாவின் எண்ணிக்கை மாதா, மாதம், ஆரவாரம் என்ற நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. நீண்ட காலமாக நம்பர்-1 இடத்தில் இருந்த ஹீரோ ஸ்பிளென்டர் மார்க்கெட்டையே அசைத்து பார்த்துவிட்டு, விஸ்வரூப விற்பனை வளர்ச்சியை பெற்று வருகிறது. வாகன நெருக்கடியில் திணறும் நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு எளிதானதும், ஹோண்டாவின் நம்பகத்தன்மை வாய்ந்த ஸ்கூட்டர் என்பதும் இதன் விற்பனையை உயர பறக்கச் செய்திருக்கிறது. கடந்த மாதம் 2,25,704 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. மேலும், சமீபத்தில் இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா விற்பனை ஒரு கோடி என்ற இமாலய இலக்கை கடந்திருப்பதும் நினைவுகூறத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 22, 2015, 12:29 [IST]
English summary
Top 10 best selling two wheelers in July 2015.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+