நவம்பரில் டாப் 10 டூ வீலர்கள்... ஆக்டிவா விற்பனையில் லைட்டா ஒரு ஜெர்க்

Written By:

இருசக்கர வாகன மார்க்கெட்டில் ஸ்கூட்டர்களின் ஆதிக்கம் அதிரடியாக உயர்ந்து வருவதை கடந்த மாத விற்பனை மூலம் தெள்ளத் தெளிவாகி புலனாகிறது. ஆம், கடந்த மாதம் டாப் 10 பட்டியலில் அதிரடியாக டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் நுழைந்ததுடன், மிக முக்கியமான இடத்தையும் பெற்றிருக்கிறது.

அதேநேரத்தில், ஆக்டிவா விற்பனையில் சிறிய பின்னடைவு காணப்பட்டது. கடந்த மாதத்தில் எந்தெந்த இருசக்கர மாடல்கள் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்தது என்பதுடன், அவை எந்தெந்த இடத்தில் உள்ளன என்பதையும் வரிசை கிரமமாக பார்த்துவிடலாம்.

10. பஜாஜ் சிடி 100

10. பஜாஜ் சிடி 100

கடந்த அக்டோபரை ஒப்பிடும்போது, நவம்பரில் பஜாஜ் சிடி 100 பைக்கின் விற்பனை வெகுவாக குறைந்தது. இதனால், 7வது இடத்திலிருந்து 10வது இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த மாதம் 42,806 பஜாஜ் சிடி 100 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. குறைந்த பட்ஜெட், நிறைவான மைலேஜ் தரும் இந்த பைக்கிற்கு ஊரக மார்க்கெட்டில் சிறந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

09. ஹீரோ கிளாமர்

09. ஹீரோ கிளாமர்

கடந்த அக்டோபர் மாதத்தைவிட விற்பனை வெகுவாக குறைந்திருந்தாலும், பிற மாடல்களின் விற்பனையும் குறைந்ததால், ஒருபடி முன்னேறி 9வது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 46,050 ஹீரோ கிளாமர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. மென்மையான எஞ்சின், தோற்றம் மற்றும் மைலேஜ் ஆகியவை இந்த பைக்கை முன்னிலைப்படுத்தும் சிறப்பம்சங்கள்.

08. பஜாஜ் பல்சர்

08. பஜாஜ் பல்சர்

கடந்த அக்டோபர் மாதத்தில் 6வது இடத்தில் இருந்த பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனை, கடந்த மாதம் 8வது இடத்துக்கு இறங்கியது. கடந்த மாதம் 49,281 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அக்டோபர் மாதத்தைவிட விற்பனை வெகுவாக குறைந்தது. ஆனாலும், சிறந்த செயல்திறன், தோற்றம், சரியான விலையில் கிடைக்கும் பல்சர் பைக்குகளுக்கு இளைஞர்களிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது.

07. டிவிஎஸ் ஜுபிடர்

07. டிவிஎஸ் ஜுபிடர்

டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரின் விற்பனை தடாலடியாக உயர்ந்தது, டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்ததுடன், 7வது இடத்தை பிடித்தது. கடந்த மாதம் 51,768 டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. ஹீரோ மேஸ்ட்ரோவை பட்டியலுக்குள் இருந்தும் விரட்டியுள்ளது. டிசைன், செயல்திறன், மைலேஜ் மற்றும் வசதிகளில் நிறைவான மாடல்.

06. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

06. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

இந்த பட்டியலில் தொடர்ந்து இடம்பெறுவதுடன் போட்டியில்லாத ஒரு செக்மென்ட்டில் கோலோய்ச்சி வரும் மாடல் டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட். டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை அளித்து வருகிறது. கடந்த மாதம் 57,832 டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. மிக குறைவான விலை, பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், எளிதாக ஓட்டுவதற்கும் சிறந்த மாடல் என்பதால், தொடர்ந்து வரவேற்பை பெற்ற மாடலாக வலம் வருகிறது.

 05. ஹோண்டா சிபி ஷைன்

05. ஹோண்டா சிபி ஷைன்

125சிசி செக்மென்ட்டில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் ஹோண்டா ஷைன் டாப் 10 பட்டியலில் தொடர்ந்து 5வது இடத்தை தனது ஆஸ்தான இடமாக தக்க வைத்து வருகிறது. கடந்த மாதம் 61,626 ஹோண்டா ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. சிறந்த எஞ்சின், தோற்றம், செயல்திறன், மைலேஜ் என அனைத்திலும் நிறைவான 125சிசி பைக்.

 04. ஹீரோ பேஷன்

04. ஹீரோ பேஷன்

கடந்த மாதம் 4வது இடத்தில் ஹீரோ பேஷன் இடம்பெற்றிருக்கிறது. கடந்த மாதம் 86,060 ஹீரோ பேஷன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. தோறறம், மென்மையான எஞ்சின், மைலேஜ் ஆகியவை இந்த பைக்கை முன்னிலைப்படுத்தும் அம்சங்கள்.

03. ஹீரோ டீலக்ஸ்

03. ஹீரோ டீலக்ஸ்

கடந்த மாதம் ஹீரோ டீலக்ஸ் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த மாதத்தில் 94,704 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. பட்ஜெட் விலையில் டிசைன், மைலேஜ் என அனைத்திலும் ஓர் சிறந்த மாடல்.

02. ஹோண்டா ஆக்டிவா

02. ஹோண்டா ஆக்டிவா

முதல்முறையாக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையில் சற்றே சரிவு காணப்பட்டது. கடந்த மாதம் 1,83,824 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அக்டோபரில் பண்டிகை காலத்தையொட்டி, 2.37 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் விற்பனை வெகுவாக குறைந்து காணப்பட்டதுடன், ஸ்பிளென்டரின் முதலிடத்தை நழுவவிட்டது.

01. ஹீரோ ஸ்பிளென்டர்

01. ஹீரோ ஸ்பிளென்டர்

ஒருவழியாக ஆக்டிவாவை முந்தி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறது ஹீரோ ஸ்பிளென்டர். கடந்த மாதம் 2,31,160 ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. மைலேஜ், டிசைன், மென்மையான எஞ்சின் என்பதோடு, சரியான விலையில் கிடைப்பதில், வாடிக்கையாளர்களின் முதல் சாய்ஸாக இருந்து வருகிறது.

 
English summary
Top 10 Best selling two-wheelers in November 2015.
Story first published: Thursday, December 31, 2015, 11:24 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark