மயிரிழையில் ஸ்பிளென்டரை முந்திய ஆக்டிவா... அக்டோபரில் டாப் -10 டூ வீலர்கள்!

By Saravana

இந்திய இருசக்கர வாகன மார்க்கெட்டில் விற்பனையில் யார் நம்பர்-1 என்ற போட்டியில் ஹோண்டா ஆக்டிவா, ஹீரோ ஸ்பிளென்டர் இடையே கடும் யுத்தம் நடக்கிறது. ஒவ்வொரு மாதமும் இந்த இரு மாடல்களுக்கும் இடையிலான விற்பனையை அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

அந்த வகையில், கடந்த மாதம் ஸ்பிளென்டர் முதலிடத்தை பிடித்த நிலையில், இந்த மாதம் மிக சொற்பமான வித்தியாசத்தில், முதலிடத்தை ஹோண்டா ஆக்டிவா பிடித்து அசத்தியிருக்கிறது. மேலும், பண்டிகை காலம் என்பதால் சில மாடல்களின் விற்பனை புதிய சாதனை அளவுகளை தொட்டது. அக்டோபரில் யார், யார் எந்தெந்த இடத்தில் இருக்கின்றனர் என்பதை ஸ்லைடரில் காணலாம்.

10. ஹீரோ கிளாமர்

10. ஹீரோ கிளாமர்

கடந்த மாதம் ஹீரோ கிளாமர் பைக் 10வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மொத்தமாக 62,482 ஹீரோ கிளாமர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த சில மாத நிலவரத்தை ஒப்பிட்டால், டாப் 10 பட்டியலில் கீழே இறங்கினாலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், 17.8 சதவீதம் ஹீரோ கிளாமரின் விற்பனை ஓங்கியிருப்பது மகிழ்ச்சியான விஷயமே.

 09. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

09. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

பைக்குகளுக்கும், ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கும் இடையே கடும் யுத்தம் நடந்து வரும் வேளையில் சத்தமில்லாமல், ஒரு நல்ல விற்பனை எண்ணிக்கையை டிவிஎஸ் நிறுவனத்தின் மொபட் மாடலான எக்ஸ்எல் சூப்பர் பெற்று வருகிறது. கடந்த மாதம் 9வது இடத்தை பிடித்த டிவிஎஸ் எக்ஸஎல் சூப்பர் விற்பனை சற்று குறைவுதான். கடந்த மாதம் 65,241 டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட்டுகள் விற்பனையாகியுள்ளன. பட்ஜெட் விலையில் ஓர் எளிமையான போக்குவரத்து சாதனம் என்பதோடு, அனைத்து சாலை நிலைகளுக்கும் ஏற்றது. பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் வலுவான கட்டமைப்பை பெற்றிருப்பது இதன் பலம்.

08. ஹீரோ மேஸ்ட்ரோ

08. ஹீரோ மேஸ்ட்ரோ

ஹீரோ ஆக்டிவா 110 ஸ்கூட்டரின் ரீபேட்ஜ் மாடலான ஹீரோ மேஸ்ட்ரோ குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. கடந்த மாதம் 8வது இடத்தை பிடித்த ஹீரோ மேஸ்ட்ரோவின் விற்பனை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட கடந்த அக்டோபரில் 52.2 சதவீதம் கூடியிருப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஆக்டிவாவின் அதே நம்பகத்தன்மையுடன், ஹீரோவின் வலுவான சர்வீஸ் கட்டமைப்பு வசதிகளும் இந்த ஸ்கூட்டருக்கு பலம் சேர்க்கின்றன.

07. பஜாஜ் சிடி 100

07. பஜாஜ் சிடி 100

கடந்த மாதம் பஜாஜ் சிடி100 பைக் 7வது இடத்தை பிடித்தது. கடந்த மாதத்தில் 66,517 பஜாஜ் சிடி100 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. குறைவான விலையில் அதிக மைலேஜ் தரும் பைக் மாடலாக இருப்பதால், ஊரகப் பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

06. பஜாஜ் பல்சர்

06. பஜாஜ் பல்சர்

குறைவான விலையில், அதிக எரிபொருள் சிக்கனமும், செயல்திறனும் கொண்ட சிறந்த ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக்குகள் வேண்டுவோர்க்கு கண்ணில் நிழலாடும் முதல் மாடல் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் வரிசை பைக் மாடல்கள்தான். கடந்த மாதம் 6வது இடத்தை பல்சர் வரிசை மாடல்கள் பிடித்தன. கடந்த மாதம் 70,618 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

05. ஹோண்டா சிபி ஷைன்

05. ஹோண்டா சிபி ஷைன்

125சிசி பைக் மார்க்கெட்டில் முதன்மை வகிக்கும் மாடல் ஹோண்டா சிபி ஷைன். கடந்த மாதம் 5வது இடத்தை பிடித்தது. கடந்த மாதத்தில் 90,168 ஹோண்டா ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அதிக எரிபொருள் சிக்கனம், ஸ்மூத்தான செயல்திறன் மிக்க எஞ்சின், கச்சிதமான டிசைன் போன்றவை நடுத்தர வயதுக்காரர்களுக்கான சிறப்பான மாடலாக விளங்குகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த அக்டோபரில் விற்பனை 40.6 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த மாடலுக்கு இன்னும் சரியான போட்டியாளர் களத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் புதிய ஷைன் பைக் மாடல் வந்திருப்பதும், இதன் விற்பனையை கூட்டும் என்று நம்பலாம்.

04. ஹீரோ பேஷன்

04. ஹீரோ பேஷன்

கடந்த மாதம் நான்காவது இ"த்தில் ஹீரோ பேஷன் பைக் பிடித்தது. குறைவான விலையில் நிறைவான 100சிசி பைக் மாடல். தோற்றம், எரிபொருள் சிக்கனம் போன்றவையும், ஹீரோ பிராண்டு மீதான நம்பகத்தன்மையும் இந்த பைக்கிற்கு சிறப்பான இடத்தை பெற்றுத் தந்துள்ளது. கடந்த மாதம் 95,883 பேஷன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், கடந்த ஆண்டு 1,02,866 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் விற்பனையில் 6.7 சதவீதம் சரிவு ஏற்பட்டது.

03. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்

03. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்

பட்ஜெட் விலையில் சிறந்த பைக் மாடலாக வலம் வரும் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் மாடல் கடந்த மாதம் 3வது இடத்தை பிடித்தது. கடந்த மாதத்தில் 1,07,294 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடும் 5.3 சதவீதம் கூடுதல் என்பது ஹீரோவுக்கு மகிழ்ச்சியானத் தகவல்.

02. ஹீரோ ஸ்பிளென்டர்

02. ஹீரோ ஸ்பிளென்டர்

கடந்த மாதம் முதலிடத்தை தவறவிட்டது ஹீரோ ஸ்பிளென்டர். கடந்த மாதம் 2,36,564 ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. பண்டிகை கால விற்பனை என்பதால் ஸ்பிளென்டர் விற்பனையில் நல்ல ஏற்றம் காணப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் விற்பனையைவிட, கடந்த மாத விற்பனை 7 சதவீதம் கூடுதலாக இருந்தது. ஆனாலும், முதலிடத்தை மயிரிழையில் ஆக்டிவாவிடம் கோட்டை விட்டது.

01. ஹோண்டா ஆக்டிவா

01. ஹோண்டா ஆக்டிவா

கடந்த மாதம் ஸ்பிளென்டரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை ஆக்டிவா ஸ்கூட்டர் பிடித்தது. கடந்த மாதம் 2,37,563 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும், கடந்த ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடும்போது, 34.9 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது. எனவே, எதிர்காலத்தில் ஆக்டிவாவுக்கு நம்பர்- 1 இடம் உறுதியாகிவிடும் என நம்பலாம். நகர்ப்புற போக்குவரத்துக்கு எளிது, அதிரடி பிக்கப், டிசைன், தரம் என அனைத்திலும் ஹோண்டா ஆக்டிவா நம்பர்-1 ஆக இருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

Most Read Articles
English summary
Top 10 Best selling two-wheelers in October 2015
Story first published: Friday, November 20, 2015, 17:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X