ரூ.9,999 மாதத் தவணையில் டிரையம்ஃப் போனிவில் பைக் - விபரம்
டிரையம்ஃப் போனிவில் பைக்கிற்கு எளிய மாதத் தவணையுடன் கூடிய சிறப்பு கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
இதன்மூலம், டிரையம்ஃப் போனிவில் பைக்கை எளிதாக வாங்கும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. முழு விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

வங்கிக் கடன்
எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைந்து இந்த சிறப்பு கடன் திட்டத்தை டிரையம்ஃப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் மட்டுமின்றி, பிற அனைத்து டிரையம்ஃப் மாடல்களுக்கும் எச்டிஎஃப்சி வங்கி மூலம் சிறப்பு கடன் திட்டத்தை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

கடன் திட்ட விபரம்
இந்த கடன் திட்டத்தின்படி, ரூ.2,35,000 முன்பணமும், 5 ஆண்டுகளுக்கு மாத் தவணையாக ரூ.9,990ஐ செலுத்த வேண்டும்.

பைக்கை பற்றி
இங்கிலாந்தை சேர்ந்த டிரையம்ஃப் நிறுவனத்தின் கிளாசிக் ரக பைக் மாடல்தான் டிரையம்ஃப் போனிவில். மூன்றாம் தலைமுறை மாடல்தான் இப்போது விற்பனையில் இருக்கிறது. உலகின் அதிவேக சாதனைகள் படைப்பதற்கு உகந்த இடமான அமெரிக்காவின் போனிவில் சால்ட் ஃப்ளாட்ஸ் பகுதியை மனதில் வைத்து இந்த பெயரை வைத்தனர். பழமையான டிசைன் அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கலந்துகட்டிய இப்போதைய மாடல் 2001ல் அறிமுகம் செய்யப்பட்டது.

சக்திவாய்ந்த எஞ்சின்
இந்த பைக்கின் மிக முக்கிய அம்சம் சக்திவாய்ந்த எஞ்சினை கொண்டிருப்பதுதான். இந்த பைக்கில் அதிகபட்சம் 59.84 எச்பி பவரயைும், 61 என்எம் டார்க்கையும் வழங்கும் 865சிசி பேரலல் ட்வின் ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

விலை
இந்தியாவில் ரூ.5.99 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் ட்ரையம்ஃப் போனிவில் பைக் கிடைக்கிறது. இந்தியாவில் டிரையம்ஃப் பைக் நிறுவனத்தின் குறைவான விலை மாடல் இப்போது இந்த பைக் மாடல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








