இந்தியாவில் ஸ்பெஷல் ராக்கெட்டை அறிமுகப்படுத்தும் டிரையம்ஃப் நிறுவனம்!
இந்தியாவில் டிரையம்ஃப் நிறுவனத்தின் ராக்கெட் எக்ஸ் லிமிடேட் எடிசன் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
மிகவும் தனித்துவமும், அதிசக்திவாய்ந்த இந்த மோட்டார்சைக்கிள் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

ராக்கெட் எக்ஸ்
டிரையம்ஃப் ராக்கெட் மோட்டார்சைக்கிளின் தசாப்த கொண்டாட்டத்தையொட்டி வெளியிடப்பட்ட மாடல்தான் ராக்கெட் எக்ஸ் என்ற லிமிடேட் எடிசன். டிரையம்ஃப் ராக்கெட் மோட்டார்சைக்கிளின் லிமிடேட் எடிசன் மாடல்தான் ராக்கெட் எக்ஸ். இந்த மாடலையே இப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்த டிரையம்ஃப் திட்டமிட்டிருக்கிறது.

லிமிடேட் எடிசன்
மொத்தமாக 500 மோட்டார்சைக்கிள்கள்தான் உலக அளவில் விற்பனை செய்யப்பட உள்ளன. அதில், சில மோட்டார்சைக்கிள்களை இந்தியாவிற்கு ஒதுக்கீடு செய்ய டிரையம்ஃப் முடிவு செய்துள்ளது.

எஞ்சின்
டிரையம்ஃப் ராக்கெட் எக்ஸ் மோட்டார்சைக்கிளில் 146 எச்பி பவரயைும், 221 என்எம் டார்க்கையும் வழங்கும் 2,294சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.

பிரத்யேக அம்சம்
டிரையம்ஃப் ராக்கெட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் கருப்பு வண்ணத்தில் வெளியிடப்பட்டது. ஆங்காங்கே சில்வர் வண்ண பாகங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

எதிர்பார்க்கும் விலை
ரூ.22.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








