ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் கஸ்டமைஸ் மாடல் அறிமுகம்!

By Saravana

கோவாவில், கடந்த வார இறுதியில் நடந்த இந்திய பைக் வீக் திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டிரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் கஸ்டமைஸ் மாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ராஜ்புத்னா கஸ்டமைஸ் நிறுவனத்தின் கைவண்ணத்தில் இந்த பைக் உருவாகியுள்ளது. ஒய்யார அழகியுடன் உடனுறையும் இந்த கஸ்டமைஸ் பைக்கின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


முதலாமாண்டு கொண்டாட்டம்

முதலாமாண்டு கொண்டாட்டம்

ட்ரையம்ஃப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் நுழைந்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் விதத்தில் இந்த புதிய கஸ்டமைஸ் பைக் உருவாக்கப்பட்டது. இரு மாதங்கள் உழைப்பில் இந்த புதிய கஸ்டமைஸ் பைக் உருவாக்கப்பட்டதாக ராஜ்புத்னா நிறுவனம் தெரிவித்தது.

மேட் ஃபினிஷ்

மேட் ஃபினிஷ்

மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட இந்த பைக் கருப்பு மற்றும் சாம்பல் வண்ணக் கலவையில் கவர்ந்தது.

அசத்தல்

அசத்தல்

வழக்கத்திற்கு மாறான டிசைனில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ஹேண்டில்பார், டெயில் லைட்டுகள், முன்புறத்தில் சிறிய ஃபென்டர், புகைப்போக்கி குழாய் போன்றவை பைக்கிற்கு வித்தியாசமான தோற்றத்தை வழங்குகிறது.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. சாதாரண மாடலில் இருக்கும் அதே 865 சிசி பேரலல் ட்வின் ஏர்கூல்டு எஞ்சின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 61 பிஎஸ் பவரையும், 61 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது.

புதிய மாடல்கள்

புதிய மாடல்கள்

இந்திய பைக் வீக் திருவிழாவில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இரண்டு புதிய அட்வென்ச்சர் ரக பைக் மாடல்களை ட்ரையம்ஃப் காட்சிக்கு வைத்திருந்தது. ட்ரையம்ஃப் டைகர் XCx மற்றும் டைகர் XRx ஆகிய மாடல்கள்தான் ட்ரையம்ஃப் அரங்கை அலங்கரித்தன. இரண்டு பைக்கிலும் 3 சிலிண்டர் 800சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 92.68 எச்பி பவரையும், 79 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டவை. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

டைகர் வரிசையில் வர இருக்கும் இந்த புதிய அட்வென்ச்சர் பைக் மாடல்களில் க்ரூஸ் கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக் சிஸ்ம், 4 வே ட்ரான்க்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், அலாய் வீல்கள், மோனோஷாக் அப்சார்பர் ஆகியவை நிரந்தர அம்சங்களாக இருக்கும். அடுத்த மாத இறுதியில் இந்த புதிய பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொணடு வரப்படும் என தெரிகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்சி 800 பைக் ரூ.12.04 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்கப்படுகிறது. இதைவிட சற்று கூடுதலான விலையில் இந்த புதிய பைக் மாடல்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 25, 2015, 11:22 [IST]
English summary
The India Bike Week had loads to offer to the hundreds of bikers who rode their way to Vagator in Goa over the weekend. Even the audience were entertained with lots of music, beer and food.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+