ட்ரையம்ஃப் நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் டூரர் பைக் அறிமுகம்
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ட்ரையம்ஃப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு ரகங்களில் உயர்வகை பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
மேலும், அட்வென்ச்சர் டூரர் ரகத்தில் பல மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ட்ரையம்ஃப் டைகர் குடும்ப வரிசையில் புதிய அட்வென்ச்சர் டூரர் பைக் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ட்ரையம்ப்ஃப் டைகர் 800 எக்ஸ்சிஏ என்ற இந்த புதிய மாடல் நீண்ட தூர பயணங்களுக்கும், எந்தவொரு சாலை நிலைகளிலும் சிறப்பாக எதிர்கொள்வதற்கும் உண்டான பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.
இந்த பைக்கில், 95 பிஎஸ் பவரையும், 79 என்எம் டார்க்கையும் வழங்கும் 800சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆஃப்ரோடிங் செய்யும்போதும் சொகுசான பயண அனுபவத்தை வழங்க வல்ல இந்த உயர்வகை பைக் மாடலில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.
ரூ.13.75 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








