அட்டகாசமான டிசைனில் 200சிசி அப்பாசி மாடலை களமிறக்கும் டிவிஎஸ்!

By Saravana

கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த சர்வதேச வாகன கண்காட்சியில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் டிரேக்கன் என்ற பெயரிலான புதிய பைக் ஒன்றை காட்சிக்கு வைத்திருந்தது.

இந்த டிரேக்கன் மாதிரி பைக்கின் அடிப்படையில்தான், 200சிசி எந்திரம் பொருத்தப்பட்ட புதிய அப்பாச்சி பைக்கை டிவிஎஸ் நிறுவனம் உருவாக்கி வருகிறது. தற்போது 160சிசி மற்றும் 180சிசி ஆகிய எந்திர ரகத்தில் அப்பாச்சி பைக் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இரண்டிற்கும் தோற்றத்தில் அதிக வேறுபாடுகள் இல்லை. ஆனால், புதிய 200சிசி ரக அப்பாச்சி பைக் தோற்றத்தில் முற்றிலும் புதியதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த புதிய அப்பாச்சி 200 மாடல் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 தயாரிப்பு நிலை மாடல்

தயாரிப்பு நிலை மாடல்

அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள சர்வதேச வாகன கண்காட்சியில், புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கின் தயாரிப்புக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தகுதியுடைய மாதிரி பைக் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 எஞ்சின்

எஞ்சின்

புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கில் திரவ குளிர்விப்பு முறை கொண்ட ஒற்றை உருளை அமைப்புடைய எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எந்திரத்துடன் 6 விதமான வேகத்தில் இயக்கத்தை தரக்கூடிய, பற்சக்கர அமைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த எந்திரம் அதிகபட்சமாக 28 குதிரை சக்தியையும், 20 நியூட்டன் மீட்டர் முறுக்குவிசையையும் வழங்க வல்லதாக இருக்கும்.

 முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

பின்புறத்தில் ஒற்றை தாங்கியில் செயல்படும் அதிர்வு உறிஞ்சும் அமைப்பு, பூட்டுதலில்லா முறையில், சக்கர சுழற்சியை நிறுத்தும் வசதி, மிச்செலின் நிறுவனத்தின் டயர்கள், மின்னணு முறையில் தகவல்களை அளிக்கும் திரை போன்றவை முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கும்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.1.50 லட்சம் ஆரம்ப விலையில் புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி

போட்டி

பஜாஜ் ஆட்டோவின் 200சிசி பல்சர் மாடல்கள், கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக் 200 மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 6, 2015, 11:03 [IST]
English summary
Currently TVS Motors offers two versions of their Apache motorcycle in India. This includes both 160cc and 180cc displacements, and both motorcycles share similar bodywork and design elements. This new 200cc Apache will not be launched prior to 2016 and it is most likely that TVS will showcase a production ready model at 2016 Auto Expo in Delhi.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+