டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரின் புதிய டாப் வேரியண்ட் விலை, சிறப்பம்சங்கள்!
நம் நாட்டு ஸ்கூட்டர் மார்க்கெட்டின் மிக வெற்றிகரமான ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்று என்ற பெருமையை மிக குறுகிய காலத்தில் டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் பெற்றிருக்கிறது. விற்பனைக்கு வந்து 18 மாதங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.
இந்தநிலையில், டிவிஎஸ் ஜுபிடரின் வெற்றியை தக்க வைக்கும் விதத்தில், பல கூடுதல் வசதிகளுடன் கூடிய ZX என்ற பெயரில் ஜுபிடர் ஸ்கூட்டரின் புதிய டாப் வேரியண்ட் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதனிடையே, இந்த புதிய வேரியண்ட்டின் விலை விபரம் டிவிஎஸ் மோட்டார்ஸ் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. விலை, கூடுதல் சிறப்பம்சங்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


சிறப்பம்சங்கள்
அலாய் வீல்கள், ட்யூப்லெஸ் டயர்கள், பாஸ் சுவிட்ச், வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் எரிபொருள் தொட்டி மூடி ஆகியவையும் சிறப்பம்சங்களாக இருக்கின்றன.

டிஸ்க் பிரேக்
புதிய இசட்எக்ஸ் வேரியண்ட்டில் முன்புற சக்கரத்தில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனும் வழங்கப்பட உள்ளது. டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும், 220மிமீ டிஸ்க் பிரேக் சிஸ்டம் இந்த புதிய வேரியண்ட்டில் நிரந்தர அம்சமாக இருக்கும்.

எஞ்சின்
எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரில் 8 பிஎஸ் பவரையும், 8 என்எம் டார்க்கையும் வழங்கும் 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. சிவிடி கியர்பாக்ஸ் பன்படுத்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும்.

விலை விபரம்
டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரின் டிரம் பிரேக் கொண்ட மாடல் ரூ.47,989 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த புதிய டிஸ்க் பிரேக் வசதியுடன் வரும் இசட்எக்ஸ் வேரியண்ட் ரூ.50,012 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








