இருசக்கர வாகனங்களில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் கட்டாயமாக்க முடிவு!
விபத்துகளை குறைக்கும் முயற்சியாக இரு சக்கர வாகனங்களில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் கட்டாயமாக்கப்பட உள்ளது.
விபத்துகள் மூலம் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகன விபத்துக்களின் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் அதிகம்.

இந்தநிலையில், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க புதிய பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு வரப்பட உள்ளது. கார்களில் டே-டைம் ரன்னிங் லேம்ப் எனப்படும் பகல் நேர விளக்குகள் உள்ளது போன்று, பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட உள்ளது.
எஞ்சின் இயக்கத்தில் இருக்கும்போது ஹெட்லைட்டுகள் ஒளிர்ந்து கொண்டே இருக்கும். ஒருவேளை, விபத்துகள் நேர்ந்தால், மற்ற சாலை பயணிகளுக்கு சமிக்ஞைகளை அளிக்கும் வகையில், இந்த ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் பயன்படும்.
அத்துடன், வாகனங்களில் ஒலி உருவாக்கும் கருவிகள் பொருத்துவது குறித்தும் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
இந்த ஏ.ஹெச்.ஓ ஆன் திட்டம் நடைமுறைக்கு வந்தால், இரு சக்கர வாகனங்களின் இஞ்ஜின் துவக்கப்பட்டதுடன் ஹேட்லைட்டுகள் தானாக இயங்க துவங்கிவிடும். ஒவ்வொரு முறையும், இரு சக்கர வாகனஒட்டிகள், தங்கள் வாகனத்தின் ஹெட்லேம்ப்களை ஆன் செய்யவோ, ஆஃப் செய்யவோ அவசியம் இருக்காது. அதற்கான பிரத்யேகமான ஸ்விட்ச்களும் வாகனங்களில் இருக்காது.
விபத்துகளை குறைக்கும் நோக்கில், இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டு, இது தொடர்பாக, அடுத்தக்கட்ட நடைமுறைகள் இறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த விஷயம் தொடர்பாக, ஆராய் அல்லது ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அஸோசியேஷன் ஆஃப் இந்தியா எனப்படும் அமைப்பு, சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியிடம் விரிவான அறிக்கையை வழங்கி உள்ளது.
இதையடுத்து, வாகனங்களின் தரங்களை நிர்ணயிக்கும் ஆராய் அமைப்பு மேற்குறிப்பிட்ட திட்டங்களை நடைமுறை படுத்த திட்டமிட்டுள்ளது. சாலை பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த கமிட்டியும் இந்த ஏ.ஹெ.ஓ ஆன் திட்டத்தை வலியுறுத்துவதனால், இது நிச்சயம் நடைமுறை படுத்தப்ப்டும் என தெரிகிறது.
இந்த ஏ.ஹெ.ஓ ஆன் திட்டமானது உலகின் பல்வேறு பகுதிகளில் செயல்பாட்டில் உள்ளது. பல ஐரோப்பிய நாடுகளில் 2003-ஆம் ஆண்டு முதலே இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இதனால், விபத்துகளை குறைக்கும் விஷயத்தில் குறிப்பித்தக்க பலன்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் தகவல்களின் படி, இரு சக்கரங்கள் கொண்டு இயங்கும் வாகனங்களால் தான் அதிக்கப்படியான வாகன விபத்துகள் நிகழ்கிறது என தெரிகிறது. கடந்த ஆண்டு மட்டும் 32,524 பேர் இரு சக்கர வாகன விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,27,452 பேர் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என தெரிய வந்துள்ளது.
ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் பகல் பொழுதிலும், இரவிலும் தனி கவனத்தை ஈர்த்துள்ளது. இது விளக்குகளின் வண்ணம், ஒளிர்திறன் மற்றும் தீவிரத்தன்மையை சரிசெய்வதன் மூலம் சரிசெய்து விடலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
வாகனங்களில் செல்பவர்களுக்கு விபத்துக்கள் நேர்ந்தால், விபத்துக்களுக்கு உள்ளானவர்களை காப்பாற்றும் பொருட்டு, பிற வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீஸாருக்கும் சமிக்ஞைகள் வழங்கும் வகையிலான வசதியை அனைத்து வாகனங்களிலும் பொருத்தினால் மிகுந்த நன்மை பயக்கும்.
இதற்காக அனைத்து வாகனங்களிலும் சமிக்ஞைகள் வழங்கும் வகையிலான வசதியை பொருத்துவது குறித்து, சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
குறிப்பாக, ஆட்கள் குறைவான சாலைகளிலும், வசதிகள் குறைவாக உள்ள தனிமையான பகுதிகளில், விபத்துகளில் சிக்கியவர்களுக்கு உதவிகள் கிடைப்பது கடினம். இதற்காக, பல்வேறு நாடுகளின் மக்கள் உபயோகிக்கும் வாகனங்களில் பிரத்யேகமான ஆட்டோமேட்டிக் ஹாரன் வசதிகள் நடைமுறையில் உள்ளது.
ஆனால், இந்தியாவில் ஹாரன்கள் சர்வ சாதாரணமான விஷயமாகும். அதனால், வாகனங்கள் விபத்துகளுக்கும் உள்ளானால், மற்ற வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் சமிக்ஞைகள் அளிக்க அட்டோமேட்டிக் ஹாரன் முறையை தவிர்த்து, புதிய முறைகளை நடைமுறை படுத்துவதே சிறந்ததாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








