யூஎம் நிறுவனத்தின் க்ரூஸர் மோட்டார்சைக்கிள்கள் பிப்ரவரி 2016-ல் அறிமுகம்
யூஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், தங்களின் புதிய குரூஸர் பைக்குகளை, பிப்ரவரி 3, 2016-ல் இந்தியாவில் வெளியிட உள்ளனர்.
இந்திய வாகன சந்தைகள் வேகமாக வளர்ந்து வருவதால், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து, இங்கும் விற்பனை செய்து, வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கின்றனர்.
யூஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சார்பாக அறிமுகம் செய்யபட உள்ள மோட்டார்சைக்கிள்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

அறிமுகமாக உள்ள மோட்டார்சைக்கிள்கள்;
யூஎம் மோட்டார்சைக்கிள்ஸ் சார்பாக தயாரிக்கபடும் தி ரெனெகேட் ரேஞ்ஜ் முதலில் அறிமுகம் செய்யபட உள்ளது.
இதையடுத்து, கமாண்டோ ரேஞ்ஜ் குரூஸர்களை அறிமுகம் செய்ய உள்ளனர்.

2016 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்;
யூஎம் மோட்டார்சைக்கிள்ஸ், தங்களின் அனைத்து மோட்டார்சைக்கிள்களையும், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்தியாவில் தயாரிப்பு?
தி ரெனெகேட் மற்றும் கமாண்டோ மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவிலேயே தயாரிக்கபட உள்ளது. இதனால், இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் விலை நிர்ணயிக்க வாய்ப்புகள் உள்ளது.
இதற்காக, யூஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இந்தியாவை சேர்ந்த லோஹியா ஆட்டோ என்ற நிறுவனத்தோடு கூட்டணி அமைத்துள்ளது.

இஞ்ஜின்;
இஞ்ஜின் மற்றும் திறன் குறித்து எந்த விதமான தெளிவான தகவல்களும் யூஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை.
ஆனால், இந்த தி ரெனெகேட் மற்றும் கமாண்டோ உள்ளிட்ட இரு மோட்டார்சைக்கிள்களும், சப்-300 சிசி (300 சிசி-க்கு குறைவான), சிங்கிள் சிலிண்டர் இஞ்ஜின் கொண்டதாக இருக்கும் என தெரிகிறது. இதன் இஞ்ஜின், சற்று குறைவான சிசி அளவுகளிலும் கிடைக்க உள்ளது.
இதன் இஞ்ஜின்கள், அனேகமாக லிக்விட்-கூல்ட் இஞ்ஜின் கொண்டதாகவும், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளதாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

போட்டி மோட்டார்சைக்கிள்கள்;
யூஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இந்திய இரு சக்கர வாகன சந்தையில் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
உலகம் முழுவதிலும் புகழ் பெற்ற ராயல் என்ஃபீல்ட், சமீபத்தில் ஏராளமான குரூஸர் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்தது.
மேலும், பஜாஜ் ஆட்டோ நிறுவனமும், கொஞ்ச காலத்திற்கு முன்பு தான் புதிய அவெஞ்ஜர் குரூஸர்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
ராயல் என்ஃபீல்ட் மற்றும் பஜாஜ் ஆட்டோ தயாரிப்புகளிடம் இருந்து, யூஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டி இருக்கலாம்.

வருங்கால திட்டங்கள்;
யூஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை பொருத்த வரை, இந்தியாவை ஒரு தயாரிப்பு மையமாக ஆக்கி கொள்ள திட்டமிட்டுள்ளது.
இங்கு தயாரிக்கபடும், தி ரெனெகேட் ரேஞ்ஜ் மற்றும் கமாண்டோ ரேஞ்ஜ் குரூஸர்கள், இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபட உள்ளது.
ஆசிய சந்தைகளையும் மற்றும் பல்வேறு வளர்ந்து வரும் இரு சக்கர வாகனங்களை மனதில் கொண்டு, தி ரெனெகேட் ரேஞ்ஜ் மற்றும் கமாண்டோ ரேஞ்ஜ் குரூஸர்கள் உருவாக்கபட உள்ளது.

விலை;
யூஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கபட உள்ள இந்த மோட்டார்சைக்கிள்கள், 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்கபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

செய்திகள் உடனுக்குடன்…
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்


Click it and Unblock the Notifications








