விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய பைக் மாடல்கள் - சிறப்புத் தொகுப்பு

Written By:

நம் நாட்டு இருசக்கர வாகன சந்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிட்டது. இதனால், புதிய மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வாடிக்கையாளர்களின் கவனத்தை தக்க வைக்க பைக் தயாரிப்பு நிறுவனங்கள் கடும் முயற்சிகளை மேற்காண்டுள்ளன.

டெல்லி சர்வதேச வாகன கண்காட்சி வேறு நெருங்கி வருவதால், விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய மாடல்களின் குறித்த விஷயங்கள் வெளியாகத் துவங்கியிருக்கின்றன. அவ்வாறு, விரைவில் நம் நாட்டு பைக் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று ஆவலைத் தூண்டியிருக்கும், முக்கிய பைக் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

01. டிவிஎஸ் விக்டர்

01. டிவிஎஸ் விக்டர்

டிவிஎஸ்- சுஸுகி கூட்டணி பிரிந்தபோது, டிவிஎஸ் மோட்டார்ஸ் சொந்தமாக களமிறக்கிய முதல் மாடல் விக்டர். ஊரக மார்க்கெட்டில் நன்மதிப்பை பெற்ற பிராண்டு. இந்தநிலையில், வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பையும், பரிட்சயமான விக்டர் பிராண்டில் புதிய மாடலை களமிறக்க டிவிஎஸ் மோட்டார்ஸ் திட்டமிட்டிருக்கிறது.

இரண்டு விக்டர் மாடல்கள்

இரண்டு விக்டர் மாடல்கள்

முதலில் 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலும், பின்னர் 125சிசி பொருத்தப்பட்ட மாடலும் வருகின்றன. விக்டர் 110 மாடல் ரூ.50,000 முதல் ரூ.52,000 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

02. டிவிஎஸ் அப்பாச்சி 200

02. டிவிஎஸ் அப்பாச்சி 200

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அப்பாச்சி பிராண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக விளங்குகிறது. இந்தநிலையில், 200சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய அப்பாச்சி மாடலை டிவிஎஸ் மோட்டார்ஸ் களமிறக்க உள்ளது. தனது கூட்டணி நிறுவனமான பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்திடமிருந்து இந்த புதிய எஞ்சினுக்கான லிக்யூடு கூல்டு தொழில்நுட்பத்தை டிவிஎஸ் பெற்றிருக்கிறது.

தயாரிப்பு நிலை மாடல்

தயாரிப்பு நிலை மாடல்

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டிவிஎஸ் டிரேக்கன் கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. கேடிஎம் டியூக் 200, பஜாஜ் பல்சர் 200 என்எஸ், ஹோண்டா சிபிஆர் 250ஆர் மற்றும் விரைவில் வர இருக்கும் ஹீரோ எச்எக்ஸ்250ஆர் பைக்குகளுடன் விற்பனையில் போட்டி போடும்.

03. பஜாஜ் பல்சர் ஆர்எஸ்400

03. பஜாஜ் பல்சர் ஆர்எஸ்400

250சிசி பைக்குகளால் அலுத்துப் போனவர்களுக்கு அடுத்த தேர்வாக, கூடுதல் சக்தி படைத்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவிதத்தில், மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்400. பல்சர் வகை மாடல்கள் தோற்றத்தில் சிறப்பாகவும், வெளிநாட்டு நிறுவனங்களைவிட விலை குறைவாகவும் இருப்பதால், இந்திய இளைஞர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்திருக்கின்றன.

மெகா பல்சர்

மெகா பல்சர்

அதேபோன்று, இந்த புதிய மாடலும் மிரட்டலான தோற்றத்துடன் இளம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.1.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா சிபிஆர் 300ஆர் பைக்கிற்கு நேரடி போட்டியாக இருக்கும்.

04. பஜாஜ் பல்சர் 150என்எஸ்

04. பஜாஜ் பல்சர் 150என்எஸ்

பஜாஜ் ஆட்டோவின் புகழ்பெற்ற பல்சர் வரிசையில் விலை குறைவான நேக்டு ஸ்டைல் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட இருக்கிறது. எனவே, 150சிசி ரகத்தில் பைக் மாடலை வாங்க விரும்புவோர்க்கு மிகச் சிறப்பான தேர்வாக இருக்கும்.

பல்சர் 150என்எஸ் எஞ்சின்

பல்சர் 150என்எஸ் எஞ்சின்

இந்த பைக்கில் அதிகபட்சமாக 16.8 பிஎச்பி பவரையும், 13 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 149.5சிசி எஞ்சினுடன் வருகிறது. ரூ.70,000 எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 05. டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்

05. டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்

டிவிஎஸ்- பிஎம்டபிள்யூ கூட்டணியில் வெளியிடப்பட்டிருக்கும் முதல் பைக் மாடல் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர். ஜெர்மனியின் டிவிஎஸ் மோட்டாராட் நிறுவனத்தின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட இந்த பைக்கை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம்தான் உற்பத்தி செய்ய இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் எஞ்சின்

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் எஞ்சின்

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக்கில் 313சிசி லிக்யூடு கூல்டு சிஸ்டம் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 9,500 ஆர்பிஎம் எஞ்சின் சுழல் வேகத்தில், அதிகபட்சமாக 34 எச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம் எஞ்சின் சுழல் வேகத்தில் அதிகபட்சமாக 28 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. ரூ.3 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

06. ஹீரோ எச்எக்ஸ்250 ஆர்

06. ஹீரோ எச்எக்ஸ்250 ஆர்

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் முதல் ஸ்போர்ட்ஸ் ரக பைக் மாடல்தான் ஹீரோ எச்எக்ஸ்250 ஆர். வலுவான கட்டமைப்பு வசதி கொண்ட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இந்த புதிய மாடல் இந்த செக்மென்ட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடி தரும் எனலாம்.

எஞ்சின்

எஞ்சின்

ஹீரோ எச்எக்ஸ்250 ஆர் பைக்கில் 249சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த பைக் வடிவமைப்பில் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி நல்லது

போட்டி நல்லது

நம் நாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் களமிறங்குவதால், கடும் சந்தைப் போட்டி உருவாகும். அத்துடன், வாடிக்கையாளர்கள் சிறந்த தயாரிப்பை, சரியான விலையில் பெறும் வாய்ப்பு ஏற்படும்.

 
English summary

 Here is list of upcoming bikes in India.
Story first published: Wednesday, November 18, 2015, 14:03 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark