ரேசிங் சாம்பியன் ஜார்ஜ் லாரென்ஸோவுடன் ரேசிங் செய்ய அரிய வாய்ப்பு
டெல்லி அருகேயுள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில், பிரபல பைக் பந்தய வீரர் ஜார்ஜ் லாரென்ஸோவுடன் ரேசிங் செய்ய அரிய வாய்ப்பு உங்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த வாய்ப்பு, யமாஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 மோட்டர்சைக்கிள் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்க உள்ளது. யமாஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 மோட்டர்சைக்கிள் அறிமுத்தின் போது, ரேசிங் சாம்பியன் ஜார்ஜ் லாரென்ஸோ 2015-ஆம் ஆண்டு இறுதியில் இந்தியா வர உள்ளதாக, யமாஹா நிறுவனத்தினர் அறிவித்தனர்.

ஆகஸ்ட் 11, 2015 துவங்கி, நவம்பர் 10, 2015 வரை, யமாஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அரிய அனுபவம் கிடைக்க கூடிய வாய்ப்பு உள்ளது. மேற்குறிப்பிட்ட காலத்திற்கு இடையே யமாஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 வாங்கும் வாடிக்கையாளர்களில் இருந்து, 30 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு லாரென்ஸோவுடன் ரேசிங் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
டெல்லியில் இருந்து 40 கிலோமிட்டர் தூரத்தில், உத்திர பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் இண்டர்நேஷனல் சர்க்யூட்-டில் (பிஐசி-யில்) தான் இந்த பிரத்யேக நிகழ்ச்சி திட்டமிடபட்டுள்ளது. டிசம்பர் 1, 2015 அன்று திட்டமிடபட்டுள்ள இந்த நிகழ்ச்சியில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் இந்த 30 அதிர்ஷ்டசாலிகள், லாரென்ஸோவை நேரில் சந்திப்பதோடு மட்டுமல்லாமல், அவரோடு ரேசிங் செய்யும் அனுபவத்தையும் பெறலாம்.
ஜார்ஜ் லாரென்ஸோ, வேலண்ட்டினோ ரோஸ்ஸியுடன் இணைந்து மோவிஸ்டார் யமாஹா மோடோஜிபி அணிக்கு ரேசிங் செய்கிறார். அவர் ஏற்கனவே, இரு முறை உலக சேம்பியன்ஷிப்களில் வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த யமாஹா ஒய்இசட்எஃப்-ஆர்3, 321 சிசி, இன்லைன் 2 சிலிண்டர்களுடன் கூடிய லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் மூலம், இதன் பின் சக்கரத்திற்கு பவர் டெலிவரி செய்யப்படுகிறது. இதன் இஞ்ஜின் 41.43 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 29.6 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.
யமாஹா ஒய்இசட்எஃப்-ஆர்3, கவாசாகி நிஞ்ஜா 300 மற்றும் கேடிஎம் ஆர்சி390 உள்ளிட்ட மோட்டர்சைக்கிள்களிடம் இருந்து கடும் போட்டியை சந்தித்து வருகிறது.
யமாஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 மோட்டர்சைக்கிள், ரேசிங் புளூ மற்றும் பிளாக் லைட்டனிங் என்ற இரு நிறங்களில் கிடைகின்றது. யமாஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 மோட்டர்சைக்கிள், ரூபாய் 3.25 லட்சம் (எக்ஸ்-ஷோரும் டெல்லி) விலையில் கிடைக்கின்றது.


Click it and Unblock the Notifications








