பைக் பந்தய வீரர்களுக்கு மாற்றான ஓர் எந்திர மனிதன்: யமஹா அறிமுகம்!

By Ravichandran

சூப்பர் பைக்குகளை ஓட்டும் திறன் கொண்ட மோட்டோபாட் என்ற பெயரிலான புதிய எந்திர மனிதனை யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் டோக்கியோ மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைத்துள்ளது.

டோக்கியோ மோட்டர் ஷோ ஆட்டோமொபைலுடன் தொடர்புடைய அனைத்து நவீன தொழில்நுட்பங்களையும் அறிமுகம் செய்யும் தடமாக விளங்குகிறது. மனிதர்களை போலவே இந்த மோட்டோபாட் ஆக்ஸிலேட்டர்களை முறுக்கி, கிளட்ச்சை உபயோகம் செய்து, கியர்களையும் மாற்றும் திறன் கொண்டது.

Yamaha Motobot seems the Future Of Motorcycling

இந்த அடிப்படை மாடல் மோட்டோபாட் சற்று மெதுவாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் வேகமாக செல்லும் வகையில் மேம்படுத்தப்படும். நாளடைவில், மோடோபோட் போன்ற ரோபோக்கள் இன்னும் அதிகமான வேகத்தில், ரேசிங் தடங்களில் கூட செல்ல வாய்ப்பு உள்ளது.

தற்போதைய நிலையில், சூப்பர் பைக்கை நின்ற நிலையிலிருந்து நகர்த்துவதற்கும், வளைவுகளில் திரும்பும்போது சமநிலை தவறாமல் இருப்பதற்கும் சைடு வீல்கள் எனப்படும் முட்டுச் சக்கரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எதிர்காலத்தில் சுய சமநிலையுடன் சூப்பர் பைக்கை இயக்கும் வகையில் இது மேம்படுத்தப்படும்.

இதன்மூலம், பைக் பந்தய வீரர்களுக்கு ஏற்படும் விபத்து மற்றும் ஆபத்துக்கள் எதிர்காலத்தில் குறைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், கார் சேஸிங் செய்வதற்கும் கூட இந்த ரோபோக்களை பயன்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

பைக் பந்தய வீரர்களுக்கு மாற்றான ஓர் எந்திர மனிதன்: யமஹா அறிமுகம்!

More from DriveSpark

Article Published On: Thursday, October 29, 2015, 17:23 [IST]
English summary
Yamaha Motobot seems the Future Of Motorcycling. Yamaha Motobot was introduced in The 2015 Tokyo Motor Show. Tokyo Motor Show is the place, where we would find something like the Yamaha Motobot-Yamaha's robot that can ride superbikes.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+