கவாஸாகி நின்ஜா 300 விற்பனையை ஸ்வாகா செய்த யமஹா ஆர்3!!

By Saravana

விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட முதல் மாதத்திலேயே, கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் விற்பனையை யமஹா ஆர்3 பைக் அடியோடு சாய்த்துள்ளது.

அதேநேரத்தில், மற்றொரு போட்டியாளர்களான கேடிஎம் பைக்குகளின் விற்பனையில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. மாறாக, அந்த பைக்குகளின் விற்பனை கடந்த மாதம் ஜிவ்வென்று உயர்ந்துள்ளது.

விற்பனை இலக்கு

விற்பனை இலக்கு

கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட யமஹா ஆர்3 பைக்கிற்கு யமஹா நிர்ணயித்த இலக்கு மாதத்திற்கு 200 பைக்குகள். ஆனால், ஆகஸ்ட் 11ந் தேதிதான் விற்பனைக்கு வந்ததால், முதல் மாத விற்பனையை முழுமையாக கருத்தில் கொள்ள இயலாது.

விற்பனை

விற்பனை

கடந்த மாதம் 11ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், மொத்தம் 140 யமஹா ஆர்3 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் விற்பனை 15 பைக்குகள் என்ற அதலபாதாள எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

 ஒப்பீடு

ஒப்பீடு

கடந்த ஜூலை மாதத்தில் 74 கவாஸாகி நின்ஜா 300 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டன. மேலும், மாதந்தோறும் 90 பைக்குகள் என்ற சராசரி விற்பனையை பதிவு செய்து வந்தது. ஆனால், யமஹா ஆர்3 வரவால் கடந்த மாதம் விற்பனை 15 பைக்குகள் என்ற அளவில் வெகுவாக குறைந்துள்ளது. இதில், கவாஸாகி இசட்250 பைக்கின் விற்பனையும் அடக்கம்.

கேடிஎம் விற்பனை விர்ர்

கேடிஎம் விற்பனை விர்ர்

அதேநேரத்தில், யமஹா ஆர்3 பைக்கின் வரவு கேடிஎம் டியூக் 390 மற்றும் ஆர்சி390 பைக்குகளின் விற்பனையில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. கடந்த ஜூலையில் 532 கேடிஎம் டியூக் 390 மற்றும் ஆர்சி390 பைக்குகள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 729 பைக்குகள் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளன.

 விற்பனை தொடருமா?

விற்பனை தொடருமா?

யமஹா ஆர்3 பைக்கின் வருகை ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், இந்த விற்பனை எண்ணிக்கையை யமஹா ஆர்3 பைக் தொடருமா என்பதை வரும் மாதங்களில் பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 15, 2015, 8:19 [IST]
English summary
Yamaha R3 Beats Kawasaki Ninja 300 By sales In August.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+