இப்போது டிஸ்க் பிரேக்குடன் யமஹா சலுட்டோ பைக்!
சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய யமஹா சலுட்டோ பைக்கில் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
இது பட்ஜெட் விலையில் சிறந்த மாடலை விரும்புவோர்க்கு சிறப்பான மாடலாக அமையும். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்
யமஹா சலுட்டோ பைக் இப்போது புதிய கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மற்றும் வண்ணங்களில் கிடைக்கும். போல்டு புளூ, டேஷிங் ஒயிட், க்ளோரி க்ரீன் மற்றும் மெஜஸ்ட்டி ரெட் ஆகிய வண்ணங்களில் தேர்வு செய்து கொள்ள முடியும்.

டிஸ்க் பிரேக் மாடல்
சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது டிரம் பிரேக் சிஸ்டம் கொண்ட மாடலில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதத்தில் இப்போது முன்புறத்தில் டிஸ்க் பிரேக் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது.

விலை
ரூ.54,500 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் டிஸ்க் பிரேக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

எஞ்சின்
புதிய யமஹா சலுட்டோ பைக்கில் 125சிசி எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 8.17 எச்பி பவரையும், 10.1 என்எம் டார்க்கையும் இந்த பைக் பெறும். 4 ஸ்பீடு கான்ஸ்டென்ட் மெஷ் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. லிட்டருக்கு 78 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








