யுவராஜ்சிங்கின் கேடிஎம் 390 கஸ்டமைஸ் பைக் விரைவில் ஏலம்!

Written By:

கடந்த பிப்ரவரி மாதம் கோவாவில் நடந்த இந்திய பைக் வீக் திருவிழாவில் அறிமுகம் செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் பெயரிலான கஸ்டமைஸ் கேடிஎம் பைக் விரைவில் ஏலம் விடப்படுகிறது.

இந்த ஏலத்தொகை முழுவதும் யுவராஜ்சிங்கின் யூவிகேன் புற்றுநோய் அறக்கட்டளையின் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

யூவிகேன் எக்ஸ் 12 பைக்

யூவிகேன் எக்ஸ் 12 பைக்

கேடிஎம் டியூக் 390 பைக் அடிப்படையிலான இந்த கஸ்டமைஸ் பைக்கை புனே நகரைச் சேர்ந்த ஆட்டோலாக் என்ற கஸ்டமைஸ் நிறுவனம் வடிவமைத்திருந்தது.

ஸ்பெஷல் கிட்

ஸ்பெஷல் கிட்

யுவராஜ்சிங் பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த பைக்கிற்கு யூவிகேன் எக்ஸ்- 12 என்ற பெயரில் அழைக்கப்படிருக்கிறது. மேலும், கேடிஎம் டியூக் எக்ஸ்- 26 மற்றும் எக்ஸ் - 12 ஆகிய கஸ்டமைஸ் மாடல்களுக்கான கஸ்டமைஸ் பாடி கிட்டை தனியாக வாங்கி பொருத்திக் கொள்ள முடியும் என ஆட்டோலாக் தெரிவித்துள்ளது.

 மாறுதல்கள் செய்ய வேண்டாம்

மாறுதல்கள் செய்ய வேண்டாம்

கேடிஎம் டியூக் பைக்குகளுக்கான இந்த ஸ்பெஷல் பாடி கிட்டை பைக்கில் எந்தவொரு மாறுதல்களும் செய்யாமலேயே வாங்கி பொருத்த முடியுமாம். சேஸீ உள்ளிட்ட பைக்கின் முக்கிய பாகங்களில் எந்தவொரு சிறு மாறுதல்களோ அல்லது துளை போட தேவையில்லை என்றும் ஆட்டோலாக் தெரிவித்துள்ளது.

பாடி கிட்

பாடி கிட்

இரண்டு புகைப்போக்கி குழாய்கள், ரேஸ் பைக்குகளுக்கான சிறப்பம்சங்களுடன் கூடிய எஞ்சின் இசியூ., ரீமேப்பிங், பிஎம்டபிள்யூ ஏர் ஃபில்டர், ஒரு ஜோடி ஃபுட் பெக்ஸ், பெயிண்ட் உள்ளிட்டவை ஸ்பெஷல் பாடி கிட்டுடன் கிடைக்கும்.

விலை

விலை

நாடுமுழுவதும் உள்ள கேடிஎம் டியூக் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்பெஷல் பாடி கிட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று ஆட்டோலாக் டிசைன் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. யூவிகேன் எக்ஸ் 12 பாடி கிட்டில் டேங்க் கவர், பெல்லி கவர், ரேடியேட்டர் கவர் உள்ளிட்டவற்றுடன் ரூ.49,350 விலையில் கிடைப்பதாக ஆட்டோலாக் தெரிவித்துள்ளது.

 
English summary
First showcased at the 2015 India Bike Week in February, Yuvraj Singh's YouWeCan X-12 Custom Motorcycle - based on the KTM Duke 390 - will be up for auction soon
Story first published: Monday, July 27, 2015, 9:29 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark