யுவராஜ் சிங்கின் கேடிஎம் டியூக் 390 கஸ்டமைஸ் பைக் - எப்படியிருக்கிறது?

By Saravana

நட்சத்திர கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் பைக், கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதனை மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கும் விதத்தில், கோவாவில் நடந்த இந்திய பைக் வீக் திருவிழாவில் தனது கஸ்டமைஸ் செய்யப்பட்ட கேடிஎம் டியூக் பைக்கை அறிமுகம் செய்து வைத்தார்.

ஆட்டோலோக் என்ற கஸ்டமைஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த புதிய பைக்கை அவர் உருவாக்கியுள்ளார். கோவா பைக் வீக் திருவிழாவிற்கு வந்த அனைவரையும் கவர்ந்த இந்த பைக்கின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


நீல வண்ண ஆதிக்கம்

நீல வண்ண ஆதிக்கம்

கேடிஎம் டியூக் பைக்குகள் என்றாலே ஆரஞ்ச் வண்ணமே ஆதிக்கம் நிறைந்திருக்கும். ஆனால், யுவராஜ் சிங்கின் கேடிஎம் டியூக் 390 பைக் நீல வண்ணத்தின் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது.

ரைடு

ரைடு

இந்த கஸ்டமைஸ் பைக்கின் கான்செப்ட் மாடலை யுவராஜ் சிங் ஓட்டி வந்தும் பார்வையாளர்களை குதூகலிக்கச் செய்தார்.

கடினம்

கடினம்

கிரிக்கெட் ஆடுவதைவிட பைக் ஓட்டுவது கடினம் என்று இந்த நிகழ்ச்சியின் இடையே தெரிவித்தார்.

பாடி கிட்

பாடி கிட்

கேடிஎம் எக்ஸ்12, கேடிஎம் எக்ஸ்26, ராயல் என்ஃபீல்டு கஃபே ரேஸர் பாடி கிட் மற்றும் ஹீரோ இம்பல்ஸ் பைக்கிற்கான ஆஃப் ரோடு கிட் போன்றவற்றையும் இந்த நிகழ்ச்சியில் ஆட்டோலோக் கஸ்டைமஸ் நிறுவனம் பார்வைக்கு வைத்திருந்தது.

அட்வைஸ்

அட்வைஸ்

செய்தியாளர் சந்திப்பின்போது பைக் ஓட்டும் இளைஞர்களுக்கு என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அப்போது, இளைஞர்கள் பைக் ஓட்டும்போது ஹெல்மெட், ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து செல்வதுடன், சாலை விதிகளையும் மதித்து நடக்க வேண்டும் என்று கூறினார்.

யூவி ஓட்டிய முதல் பைக்

யூவி ஓட்டிய முதல் பைக்

இந்த நிகழ்ச்சியின்போது முதல்முறையாக தனது நண்பரின் யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கை ஓட்டியதாக அவர் நினைவுகூர்ந்தார்.

More from DriveSpark

Article Published On: Monday, February 23, 2015, 10:57 [IST]
English summary
Soaking in the 10 acre festival village in Vagator, Goa India Bike Week, the largest biking festival in India saw more than 12,000 riders and bike enthusiasts ride cross-country to Goato celebrate the spirit and lifestyle of the Indian Biking community. The festival saw the event graced by ace cricketer and bike enthusiast Yuvraj Singh, known for his enthusiasm for automobiles and is associated with Autologue Design - a car and motorcycle customization Company launching its new custom bike designs at IBW.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+